All about THF
Tamil in Digital Media
  Know, participate and spread the word!
     
 

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இவை தமிழ் கூறும் நல்லுகங்களான தமிழ் நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் சமீபத்தில் தமிழர் இடப்பெயர்வு கண்ட ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் காணக் கிடைக்கின்றன. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியமும் மற்ற பிற கலை வளங்களும், நாட்டிய கர்நாடக இசை வடிவங்களும் காலத்தால் அழிவுற்ற நிலையில் காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.

இத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய ஒரு வாய்ப்பைச் சமீபத்திய கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் மரபை இலத்திரன் வடிவில் நிரந்தரப்படுத்த ஏற்பட்டிருக்கும் அகில உலக இயக்கமாகும்.

அச்சுக் கூடங்கள் தமிழுக்கு அறிமுகமாகு முன் தமிழர்கள் மரபுச் சேதிகளைப் பனையோலைகளில் எழுதி பல்லாண்டு காலங்களாகப் பத்திரப்படுத்தி வந்தனர். ஆயினும் மர இலையிலான இவ்வூடகம் காலத்தால் அழிவுறக்கூடியதே. இத்தகைய பதிவுகள் இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் இலக்கப் பதிவாக்கப் பட்டு நிரந்தரப் படுத்தப் படவில்லையெனில் ஏறக்குறைய 10 இலட்சம் சுவடிகளில் பதிவுற்ற கலை, இலக்கிய, மருத்துவ, வானியல் மற்றும் பல்கலைச் செல்வங்கள் என்னவென்று அறியப்படாமலே அழிந்து போக வாய்ப்புள்ளது. 15ம் நூற்றாண்டு தொடக்கம் பதிவுற்ற (அச்சு) நூல்களுக்கும் இதே கதிதான். எனவே இவை முறையாக இலக்கப் பதிவாக்கப்படத் தேவையான விஷயங்களை அலச 'இ-சுவடி (இலத்திரன் சுவடி) என்றொரு மடலாடற்குழு உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மரபின் மீது ஆர்வமுள்ள எவரும் 'இ-சுவடியில்' உறுப்பினராகி பங்குபெறலாம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் முக்கிய இலக்க நூலக முகவரி: http://www.tamilheritage.org/ என்பதாகும். இங்கிருந்து அதன் பல்வேறு செயல்பாடுகள் குறித்த கிளைப்பக்கங்களுக்கு தொடர்கள் அமைகின்றன.

உதாரணமாக, மருத்துவ நூல்கள் பற்றிய குறிப்பு, பழம்சுவடிப் பாதுகாப்பு பற்றிய படக்குறிப்பு காணக்கிடைக்கிறது.

மேலும் தமிழக தொல்பொருள் ஆய்வு பற்றிய விரிவான வலைப்பகுதி Monument எனும் பக்கத்தில் அமைகிறது. சிந்து சமவெளி தொடங்கி பல்லவர், நாயக்கர், வீரமாமுனிவர் வரை தமிழின் எழுத்துச்சீர்மை அதன் தொல்வளம் அரிய படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழக இசை பற்றிய பகுதியுமுண்டு

தமிழ்த்தொண்டு புரிந்த பெரியவர்கள் படங்களும், சமகால தமிழ் இலக்கியகர்த்தாக்கள் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மரபு அறக்கட்டளை இலண்டன் வாழ் தமிழர்களுடன் சேர்ந்து பிரித்தானிய நூலகத்திலுள்ள பழம் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து வருகிறது. இந்த ஆக்கங்களைக் காண: THF-UK எனும் முகவரிக்குச் செல்லவும்.

இ-சுவடி எனும் யாகூ மடலாடற்குழு ஒன்று 2003-லிருந்து இதன் செயல் திட்டங்களை செம்மைப் படுத்த இயங்கி வருகிறது; அதே போல் சமீபத்தில் "மின்தமிழ்" என்ற மடலாடற்குழுவும் கூகுள் குழுமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

Google Groups Beta
மின்தமிழ்
வந்து பாருங்களேன்!

வலைப்பதிவு எனும் புதிய தொழில்நுட்பத்தை தமிழ் மரபு அறக்கட்டளை செம்மையான முறையில் பயன்படுத்தி வருகிறது. இதன் சார்பில் செயல்படும் வலைப்பதிவுகள் (வலைப்பூக்கள்):

முதுசொம் செய்திகள்
முதுசொம் இசை
முதுசொம் நிகழ்வு (வீடியோ)
முதுசொம் படங்கள்

தமிழ் மரபு அறக்கட்டளை இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதன் செயலராக திரு.ஆண்டோ பீட்டர் செயல் பட்டு வருகிறார். இதற்கு மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனியில் கிளைகளுண்டு.

தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய கேள்வி பதில்கள் இங்கு காணக்கிடைக்கின்றன:
பகுதி 1
; பகுதி 2
; பகுதி 3

தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஒரு நேர்காணல் இங்குள்ளது. நிலாச்சாரல் நடத்திய இச்செவ்விக்கு பதிலளிக்கிறார் முனைவர்.நா.கண்ணன்.

மேலும் முதுசொம் செயல்பாடுகள் பற்றிய தொடர் குறிப்பு "அன்புடன்" மற்றும் முத்தமிழ் மடலாடற்குழுக்களில் வருகின்றன.

தமிழ் மரபு அறக்கட்டளை முனைவர் நா.கண்ணன் (ஜெர்மனி) அவர்களால், திருமிகு.சுபாஷினி கனகசுந்தரம் (மலேசியா) மற்றும் முனைவர். கு.கல்யாண சுந்தரம் துணையுடன் ஆகஸ்ட் 29, 2001 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இது தமிழகத்தில் பதிவு பெற்ற நிருவனம். தமிழ் மரபு அறக்கட்டளையின் அறக்காவலர் குழு பற்றிய விவரமறிய!!

மின்னுலகின் பலம் பங்கேற்பவர் தொடர்பு என்பது. அதை ஊக்குவிக்கும் வகையில் புதிய, புதிய வலைத்தளங்களை தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கிவருகிறது. பங்கேற்று பயன்பெறுவதுடன், பங்களித்து தமிழை வளப்படுத்த தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் அறிந்தோரை அன்புடன் அழைக்கிறது.

Google Groups Beta
Subscribe to மின்தமிழ்
Email:
Visit this group


Yahoo! Hot Jobs
     
Home l About Us l
Copyright © 2003-2008 THF