தமிழ் மரபு அறக்கட்டளை
பேராசிரியர் திருக்குறள் பாஸ்கரன்
 
கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்
|| வணக்கம்

இந்த சிறப்புப் பகுதி பேராசிரியர். திருக்குறள் க.பாஸ்கரன் அவர்கள் மறைந்த அவரது அருமை மகனார் திரு.கருணாகரன் அவர்கள் நினைவாக உருவாக்கியுள்ள 'கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்' பற்றிய செய்திகளைத் தாங்கி வெளி வருகின்றது.




தமிழகம், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தனது இல்லத்தையே ஒரு நூலகமாக மாற்றி தமிழ் சேவை புரிந்து வருகிறார் பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன். இந்த நூலகத்தின் சிறப்பு, இங்கு சேர்த்து வைக்கப்பட்டுள்ள திருக்குறள் தொடர்பான நூல்களே. திருக்குறளின் தலைப்பில் அடங்கிய பல வெளியீடுகள் இந்த நூலகத்தில் உள்ளன. திருக்குறள் ஆய்வு செய்ய விரும்புவோர் பயன் பெறும் வகையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. இந்த நூல்கள் சிறப்பாக கண்ணாடி அலமாரிகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டு தூய்மையாக பேனப்படுகின்றன. இந்த நூலகம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 09:00 மணியிலிருந்து மாலை 06:00 மணி வரையில் தனது சேவையை வழங்கி வருகின்றது.நூலக முகவரி: குறளகம் X33, மூன்றாம் முதன்மை சாலை, அறிஞர் அண்ணாநகர், சென்னை.



Prof.Thirukural G.Baskaran, M.A, M.Sc, M.Phil, M.Ed, B.T.
Former Joint Director of Collegiate Education.

ஒளிப் படம்

இந்த நூலகத்தின் வீடியோ ஒளிப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.நூலகத்தின் உள்ளே செல்ல..!

இந்த நூலகம் தொடங்கிய நோக்கம், அதன் செயல் திட்டங்கள், இங்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் போன்ற தகவல்கள் அடங்கிய செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன. பேராசிரியர். திருக்குறள் க.பாஸ்கரன் அவர்களை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டவர் சுபாஷினி கனகசுந்தம். இப்பேட்டி 04.12.2007 அன்று பதிவு செய்யப்பட்டது.

பேட்டி ஒலிக் கோப்புகள்

பாகம் 01 - திருக்குறள் பாஸ்கரன், அறிமுகம்.

பாகம் 02 - திருக்குறளின் மேல் ஏற்பட்ட ஆர்வம், நூலகம் உருவான காரணம்.

பாகம் 03 - நூலகத்தின் நடவடிக்கைகள்்

பாகம் 04 - நூலகத்திற்கு வருபவர்கள், வருங்காலத் திட்டங்கள்




படத்தொகுப்பு

கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

திரும்பிச் செல்ல ....

Released on 13.01.2008, Copyright © Jan 2008 Tamil Heritage Foundation. All rights reserved.
 
Basic template designed by CMG Technologies.