ஆதி.குமணன்





பிறப்பு: 9.2.1950
தொழில்: பத்திரிகைஆதிபர் / ஆசிரியர்
முகவரி: 70 Jalan 36/10, Taman Kooperasi Polis II, 68100 Batu Caves, Kuala Lumpur.

(அல்லது) Editor, Malaysia Nanban, 9-11 Jalan Murai Dua, Batu Kompleks, 51200 Kuala Lumpur.

எழுத்து:
1970 முதல் எழுத்துலகில் இருந்து வரும் ஆதி.குமணன் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர். மலேசியாவின் முன்னணித் தமிழ் நாளிதழான "மலேசிய நண்பன்" இவரால் நிறுவப்பட்டு நடத்தப்படுவதே ஆகும். இதற்கு முன் "தமிழ் ஓசை" நாளிதழையும் மற்றும் "வானம்பாடி" என்னும் வார இதழையும் இவரே ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியுள்ளார். எல்லா இதழ்களிலும் இவரின் "கேள்வி பதில்" பகுதி சுவையான இலக்கியமாக அமையும்.

மலேசியாவில் புதுக்கவிதைகளை அறிமுகப்படுத்தி வளர்த்த பெருமை இவருக்கு உண்டு. தாமே முன்னோடியான பல புதுக் கவிதைகள் எழுதியுள்ளார்.

நூல்கள்: "பார்வை" என்னும் கட்டுரைத் தொகுப்பு ஒன்று மட்டுமே வெளி வந்துள்ளது.

சிறப்புக் குறிப்புகள்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். அச்சங்கத்திற்குத் தனிக் கட்டடம் வாங்கி பெருமை சேர்த்தவர். சமுதாயத் தலைவர்களில் ஒருவர். பல சமுதாய நிறுவனங்களும் அரசாங்கமும் இவருக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்கள்.


Designed by: Suba :-Copyright THF