பைரோஜி எஸ். நாராயணன்





புனைபெயர்: வானம்பாடி, பராந்தகன், பை.நா., வசந்தமோகன்.
பிறப்பு: 1929
தொழில்: மலேசிய வானொலியின் ஒலிபரப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

எழுத்து: அமரராகிவிட்ட பைரோஜி நாராயணன் மலேசியத் தமிழ் உலகத்தின் ஒரு மைல்கல்லாக இருந்தவர்.

1950-இலிருந்து எழுத்துப் பணி தொடக்கம். சிறுகதைகள், கட்டுரைகள், இசைப்பாடல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், கவிதை நாடகங்கள், இலக்கிய நாடகங்கள் என எல்லாத் துறைகளிலும் எழுதியவர்.

சிறப்புக் குறிப்பு: மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப காலங்களில் வழிகாட்டியாகவும் விமர்சகராகவும் இருந்தவர். தமிழ் நேசனில் "கதை வகுப்பு" நடத்தி பல எழுத்தாளர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர். சிறந்த மேடை, வானொலி நாடக நடிகர். அதிக சமய ஈடுபாடு கொண்ட பேச்சாளர்.


Designed by: Suba :-Copyright THF