எம்.துரைராஜ்

புனைபெயர்: மதுரம், பூவரசன்
பிறப்பு: 1-11-1934
தொழில்: அரசாங்கச் செய்தித் துறையில் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இப்போது "இதயம்" மாத இதழின் சிரியர்.
முகவரி: 25 Jalan Udang Gantung I, Taman Cuepacs, 52000 Segambut, Kuala Lumpur.
எழுத்து: 1950 முதல் எழுதி வரும் துரைராஜ் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் நன்கு அறியப் பட்டவர். கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் எழுதியுள்ளார்.

நூல்கள்: "நேரம் வந்துவிட்டது" (நாவல்); "பாதைகளும் பயணங்களும்" (சுய அனுபவ நூல்)

சிறப்புக் குறிப்பு: சிங்கப்பூரில் "புது யுகம்" இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்; "மலாயா நண்பன்" துணை ஆசிரியர்; மலேசியாவில் "தமிழ் நேசன்" துணை ஆசிரியராகவும் ஞாயிறு பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் இருந்தவர்; மலேசிய தொலைக்காட்சி செய்திப் பிரிவின் பொறுப்பாசிரியர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பத்தாண்டுகள் இருந்தவர்.


Designed by: Suba :-Copyright THF