மா. இராமு





புனைபெயர்: எம்.ஏ.இளஞ்செல்வன்
பிறப்பு: 1948
தொழில்: தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்

எழுத்து:
2000-ம் ஆண்டில் காலஞ்சென்ற இளஞ்செல்வன் மலேசியப் படைப்பாளர்களில் தலை சிறந்தவர்களுள் ஒருவர். 1962 முதல் பல சிறுகதைகள், நாவல்கள், புதுக் கவிதைகள் எழுதியுள்ளார். புதுக்கவிதை இயக்கத்தை மலேசியாவில் முன்னின்று நடத்தியவர்.

நூல்கள்: சிறுகதை நூல்கள்:
"தெருப் புழுதி"; "முச்சந்தி மலர்கள்'; "இளஞ்செல்வன் சிறுகதைகள்"

நாவல்கள்: "பசித்திருக்கும் இளங்கொசுக்கள்"; "மோகங்கள்"; "வானம் காணாத விமானங்கள்"

புதுக்கவிதை நூல்கள்: "நெருப்புப் பூக்கள்"; "புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக் கோலங்கள்" (தொகுப்பாசிரியர்); "இமைக்காத சூரியன்கள்" (தொகுப்பாசிரியர்)

சிறப்புக் குறிப்புகள்: தேசிய அளவிலான சிறுகதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகள் பெற்றவர்; 1982-இலும் 1987-இலும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பரிசும் விருதும் பெற்றவர்; மலேசியாவில் 1979-இலும், 1989-இலும் தேசிய அளவிலான புதுக்கவிதைக் கருத்தரங்கங்களைக் கூட்டி அத்துறைக்கு ஊக்கமூட்டியவர்.


Designed by: Suba :-Copyright THF