சி. ஜெயபாரதி





புனைபெயர்: ஜெய்பி
பிறப்பு: 1941
பணி: மலேசியாவில் அரசாங்க டாக்டராகவும், மருத்துவமனை மேலாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருப்பவர்.
முகவரி: Dr. S. Jayabarathi, B41 Taman Semangat, Jln Sekerat, 08000 Sungai Petani.

சிறப்புக் குறிப்புகள்: டாக்டர் ஜெயபாரதி தமிழ் உலகம் அறிந்த அறிஞர். தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம், உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். ஜோதிடம், வான் நூல் ஆகியவற்றிலும் வல்லுநர். இவரின் கட்டுரைகள் மலேசிய நாளிதழ்களிலும் வானொலியிலும் பரவலாக வந்திருக்கின்றன. பல அனைத்துலக அரங்குகளிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

டாக்டர் ஜெயபாரதி இணையத்திலும் நன்கு அறியப்பட்டவர். "அகத்தியர்" என்னும் மடலாடும் குழுவை அமைத்து நடத்தி வருகிறார்.





Designed by: Suba :-Copyright THF