கி.லோகநாதன் Ph.D





புனைப்பெயர்: அம்பலத்தார்
பிறப்பு: 11-8-1940, தமிழ் நாடு, திருச்சி மாவட்டம்

கல்வி: BSc. (Hons) கணிதம் , தத்துவம் University of Otago, New Zealand. M.Ed ( Cognitive Psychology) University of London; Ph.D ( Cognitive Psychology) University of London.

தொழில்: ஓய்வு பெற்ற பலகலைக் கழக விரிவுரையாளர். இடைநிலைப் பள்ளி கணித ஆசிரியராக தனது பணியைத் தொடங்கி, பின்னர் கல்வி அமைச்சில் பாடத்திட்ட அமைப்புப் பணியாளர், உதவி ஆளுநர், பிறகு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project INsPIRE துணை ஆளுநர், உளவியல் விரிவுரையாளர்.

முகவரி: 29, Jalan 5, Cangkat Miden, 11700 Gelugor, Penang, Malaysia

தொலைபேசி: +60 4 6561881
மின்னஞ்சல்: [email protected]


எழுத்து: தத்துவச் சிந்தனை நூற்கள்:
1. சிறிய நூற்களாக உயர்ஞானப்பனுவல், சித்தாந்தத் திருநெறி போன்றவை.

2. பெருநூற்களாகத் தமிழில் : அருட்குறள், திருநெறித் தெளிவு, சிவஞானகற்பம், அழிவிலுண்மை, திராவிட மெய்யறிவு வரலாறு, சிவஞானபோதத்திற்கு நூலிய அறிவியல் உரை போன்றவை

3. ஆங்கிலத்தில்: சிவஞானபோதம் ஆங்கில மொழிபெயர்ப்பும், புத்துரையும், இருபா இருபது, ஆங்கில மொழிபெயர்ப்பு என்பன போன்று இன்னும் பல.

4. பெருந்தேவப் பரணி என்னும் தத்துவக் கவிதை தொகுப்பு. [ஆயிரம் கவிதைகள் எழுத வேண்டியதில் 500 மேல் எழுதியாகிவிட்டது.]

5. அத்தோடு தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள். இப்பணி இன்றும் தொடர்கின்றது.

சிறுகதைகள்: அம்பலத்தார் கதைகள் (கோமாளி மலேசிய மாத இதழில் வெளிவந்தவை)

விரும்பி செய்யும் இன்றைய பணிகள்.
1. சுமேரு மொழி முதற் சங்கத் தமிழே என்று தமிழ் மக்களுக்கும் ஏனையோருக்கும் தக்க ஆய்வுகள் வழி காட்டுவது.

2. வேதங்கள் சுமேருத் தமிழின் இன்னொரு வடிவமே என நிறுத்தி வடமொழியும் பழந்தமிழின் இன்னொரு வடிவமே எனக் காட்டுவது.

3. சித்தர்களின் சிந்தையில் முகிழ்த்துள்ள ஆகமவுளவியல் எனும் துறையை வளர்த்து உலகோர்க்குக் காட்டுவது.

4. தமிழர்களிடையே தத்துவச் சிந்தனையை வளர்ப்பது.

5. இப்பணிகளுக்கென மூன்று மடலாடு குழுக்கள் (egroups) --agamicpsychology, meykandar, akandabaratam என்பவறை நடத்துவது.

சிறப்புக் குறிப்பு: மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலத் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்புகள் வகித்தவர். உலக சைவப் பேரவையின் செயலாளரகவும் மலேசியக் கிளையின் தலைவராகவும் பல ஆண்டுகள் தொண்டாற்றியவர்.



Designed by: Suba :-Copyright THF