வீ. செல்வராஜ்





புனைபெயர்: அருணன்
பிறப்பு: 16-5-1935

தொழில்: 1999-இல் காலமான செல்வாராஜ், பயிற்சி பெற்ற சுருக்கெழுத்தாளர், செயலாளர். சில வார மாத இதழ்களில் சிரியராகப் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். குறிப்பாக "புதிய சமுதாயம்". பின்னாளில் காப்புறுதி மேலாளராகவும் இருந்தார்.

எழுத்து அனுபவம்: 1960 முதல் எழுதி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

நூல்கள்: கட்டுரை நூல்கள்:
"சில உண்மைகள்"; "ஓர் இலட்சியவாதி ஓர் அரசியல்வாதி"; "நின்றதுபோல் நின்றனையே நெடுந்தூரம் நடந்தனையே" (டாக்டர் இரா. தண்டாயுதம் பற்றிய நினைவு நூல்); "திருக்கோவில் வழிபாடு"; "ஒரு வித்தியாசமான பார்வை"; "மகாபாரத மணித் துளிகள்"; "ஒரு பத்திரிகையாளனின் பார்வையில்"; "ஞானவித்து" சிறுகதைத் தொகுப்பு: "கருவைத் தேடி"; "பிரதமர் ஆடினால்"

சிறப்புக் குறிப்பு: பல ஆண்டுகளாக மலேசியாவில் பிரசுரமாகும் சிறந்த கதைகள், கவிதைகள், குறிநாவல்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து "மலேசிய இலக்கியம்" என்னும் தலைப்பில் வரிசையாக வெளியிட்டு வந்தார். 1988, 1989/90, 1992/93, 1993/94, 1995/96 என்னும் ஆண்டுகள் குறியிட்ட தொகுதிகள் வந்துள்ளன.

Designed by: Suba :-Copyright THF