
| THF DAy News |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Wednesday, 26 August 2009 21:31 |
|
Subashini Tremmel <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
toமின்தமிழ் < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it > date Thu, Aug 27, 2009 at 12:05 AM தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.
இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையப் பயணம் 8 ஆண்டுகளைக் கடந்து 9ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இது சிறப்பு மிக்க ஒரு நாள் அல்லவா? இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள சில மின்பதிப்புக்கள் இதோ..!
அ. தமிழ் மரபு அறக்கட்டளை செய்தி
முனைவர் நா.கண்ணன்:
திருமதி.சுபாஷினி ட்ரெம்மல்
ஆ.ஒலிப்பதிவுகள்:
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை நிகழ்வுகள்:
பாகம் 1 :
பாகம் 2 :
ஒலிப்பதிவு செய்து மின்பதிப்பாக்கத்திற்காக வழங்கியவர் திரு.சந்திரசேகரன்.
இ.மின்னூல்கள்
1.
நூலின் பெயர்: பாஞ்சால வீரன் பாதர் வெள்ளை சண்டை - கட்டபொம்மு கதை
நூல் ஆசிரியர்: டி.ஆர்.பாலகிருஷ்ண முதலியார் வெளியீடு : கலைமகள் அச்சகம், காலாடிப்பேட்டை சென்னை (நூல் எண்: 86) மின்பதிப்பாக்கம் செய்தவர்: திரு. இன்னம்புரான் (திரு.சௌந்தரராஜன்) நூல் படி வழங்குநர்: திரு. இன்னம்புரான் (திரு.சௌந்தரராஜன்)
2.
நூலின் பெயர்: விவேக சிந்தாமணி மூலமும்
நூல் ஆசிரியர்: கிருஷ்ணசாமி முதலியார் வெளியீடு : வித்பவசிரோன்மணி விலா
வெளியிடப்பட்ட ஆண்டு :1914
(நூல் எண்: 86) பாக்கம் செய்தவர்: திரு. கிருஷ்ணமாச்சாரி (தமிழ்தேனீ) நூல் படி வழங்குநர்: திரு. இன்னம்புரான் (திரு.சௌந்தரராஜன்)
3.
நூலின் பெயர்: தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
நூல் ஆசிரியர்: திரு.வி.க வெளியீடு : பாரி நிலையம், சென்னை
(நூல் எண்: 87)
பாக்கம் செய்தவர்: திருமதி.சுபாஷினி ட்ரெம்மல் நூல் படி வழங்குநர்: திருமதி.சுபாஷினி ட்ரெம்மல்
இந்தத் திருநாளை சிறப்பிக்கும் கட்டுரை கதைகள், கதைதகளை, செய்திகளை நீங்கள் இன்று வழங்கலாம். அனைவரும்ந்த்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Narayanan Kannan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
to This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it date Aug 27, 2009 3:58 AM மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் மரபுப் பெருநாள் வாழ்த்துக்கள்.
வழக்குகள் என்பவை நாம் உருவாக்குவதே!
தமிழ் அன்பகலா டாக்டர் கண்ணன் நடராஜன் தமிழ் மரபு அறக்கட்டளை உருவான நாளை "தமிழ் மரபுப் பெருநாள்" எனக் கொண்டாட மின்மடலிட்டார்.
மின்தமிழ் அன்பர்களுக்கு அது உவப்பாக இருந்ததால் இன்றிலிருந்து ஒரு புதிய
வழக்கு (சம்பிரதாயம்) உருவாகிறது. எமது 8வது ஆண்டு நிறைவு விழாவை சென்னை மரபுச்செல்வங்கள் வருகின்ற ஞாயிறு அன்று நடத்த உள்ளனர். நம் வலைக்குரு (webmaster) சுபா சொல்லியபடி இன்றிலிருந்து ஞாயிறு வரை
இடைப்பட்ட நாளில் தமிழ் மரபு காப்பிற்கு நாம் நம்மால் முடிந்த அளவு என்ன செய்கிறோம் என்பதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். சிறுதுளிதானே பேராற்று வெள்ளம். உங்கள் சிறு, சிறு செய்கைகளைக் கூட மின் தமிழ் மதிக்கிறது. சரஸ்வதி பூஜை என்பது வேறு என்ன? இவ்வாண்டு தொடக்கம் தமிழ்மரபு அறக்கட்டளை தமிழ் வளம் மின்னுலகில் நிலைபெற உதவும் தமிழர்களை இனம் கண்டு கௌரவிக்க உள்ளது. அவ்வகையில் மூவர் இவ்வாண்டில் சிறப்புப் பெருகின்றனர்.
1. தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் 'கடலோடி' நரசய்யா பெரும்பாலும்வயது ஆகும் போது சக்தி குறையும் என்பார்கள். இவர்கள் குடும்பத்தில் அதற்கு எதிர்மாறு ;-) நான் முதலில் இவரை சந்தித்த போது கணினி மூலம் தமிழை எவ்வளவு சிக்கலான முறையில் தட்டச்சு செய்யமுடியுமோ அவ்வளவு சிக்கலான முறையில், ஆனால் வெகு லகுவாகச் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வார்ப்பின் மூலகுறியீட்டு முறையில் (பைனரி) அந்த எண்ணை மின்னேற்றம் செய்து கொண்டிருந்தார். அசந்துவிட்டேன். இந்த வயதில் தவழும் பிள்ளை போல் அவர் மின்னுலகில் தளிர் நடை பயில்வது மகிழ்வாக உள்ளது. உண்மையில் நரசய்யாவை வயதானவர் என்று சொல்லக்கூடாது, அவர் மாமா, சிட்டி சுந்தர ராஜன், 90 வயது. அவரை மின்னுலகப் பிரவேசம் செய்ய வைத்திருக்கிறார் பாருங்கள். அது சரித்திரம். சிட்டியாரின் முதல் வலைப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்று நடத்தியது மிக மகிழ்வான செயல். அன்னாரின் உதவியுடன் தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் (1875) வலையேறி இருக்கிறது.
சிட்டி மாமாவை நான் கடைசியில் சென்னையில் பார்த்த போது ஒரு குழந்தையின் வாஞ்சையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விஜாரித்தார்.
அதற்குப்பெயர்தான் தமிழ் அக்கறை என்பது! இந்த அக்கறை 90+ பெரியவருக்கு இருந்தது. அது நம் இளைஞர்களுக்கு வர வேண்டும். Chitti recollects - http://chitti.blogspot.com/
ஆதியூர் அவதானி சரிதம் (1875) - தமிழின் முதல் புதினம் (நாவல்) - http://bharani.dli.ernet.in/thf/text/etext/etext.html அது மட்டுமில்லை, நரசய்யா எனது களப்பணியில் என்னுடன் துணை நின்றார்.
உ.வே.சா நூலகத்தொடர்பை உருவாக்கி (நன்றி ஆண்டோ பீட்டர்) உதவினார். அதன் பின் தொடர்ந்து எம் மரபுக்காப்பிற்கு உதவி வருகிறார். இ-சுவடி மட்டுறுத்தர்களுள் ஒருவர். மின்தமிழ் ஆர்வலர். இவருக்கு 'மரபுச் செல்வர்' எனும் பட்டமளிக்கிறோம். ஞாயிறன்று நடைபெறும் விழாவில் அவர் கௌரவிக்கப்படுவார். 2. டெக்சாஸ் முனைவர் நா.கணேசன்! மின்தமிழ் (மின்னுலகம்) நன்கறிந்த தமிழ் அறிஞர். மின்னுலகம் உருவாகி, அதில் தமிழ் நிலை பெற்ற காலத்திலேயே காலூன்றி தமிழ்ச் சேவை செய்து வருபவர். தமிழ் ஒருங்குறி கட்டமைப்பில் பெர்க்கிலி பல்கலைக்கழகத்துடன் இணைந்து 90களிலேயே தமிழ் மின்னுலகில் நிலைபெற ராஜபாட்டை போட்டவர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய தனியார் தமிழ் நூலகத்தை வைத்திருப்பவர். பல அரிய சேகரங்கள் இவரிடமுண்டு, 10,000 மேல்! தமிழ் மரபு அறக்கட்டளை உருவான காலத்திலிருந்து எம்முடன் துணை நிற்பவர். இப்போது நம்மையெல்லாம் இணைக்கும் வலைப்பதிவு மன்றம் 'தமிழ்மணம்' நிர்வாகஸ்தர்களில் ஒருவர். பல்பரிமாண பொறியியல் வல்லுநர் அவர். அவர் நம்முடன் துணை நிற்பது நமக்கு பலம். இப்பெரியவரையும் 30 தேதி 'மரபுச் செல்வர்' பட்டமளித்து கௌரவிக்க உள்ளோம். 3. 'விஜயவாடா' திவாகர்.
மின்தமிழ் அன்பர்கள் அறிந்த பெயர். தமிழ் மரபின் கூறுகளை புதினமாக்கி இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ் வரலாற்றுச் சிற்பி. மின்தமிழின் பரந்துபட்ட மின்னாக்க நோக்கை முதலிலேயே இனம் கண்டு, சிற்பக்கலை ஆர்வமுள்ள சிங்கப்பூர் விஜய் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தியவர். இன்னும் முக்கியமாக பொன்னியின் செல்வன் ஆர்வலர் பேரவையுடனான நமது உறவை பலப்படுத்துபவர். மின்னாடற்குழுக்களுக்குள் பாலமைக்கும் வல்லுநர். நம் திவாகரை, 'மரபுச் செல்வர்' எனச் செல்லமாக அழைக்கிறோம். தமிழகத்தின் அயலகச் சூழலில் தமிழ் காப்பது அரிதான செயல்.
விஜயவாடாவில் தமிழ் மன்றம் காத்து, நம்மாவாழ்வாருக்கு விழாவெடுத்து தமிழ்ப்பணி ஆற்றுகிறார். இவரது அனுபவமும், உந்துதலும் த.ம.அக்கு வளம் சேர்க்கும். இன்னும் வரும்...
Narayanan Kannan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> date Aug 27, 2009 12:55 PM
இன்னும் சில சிந்தனைகள்....
ஏன் இத்தனை வருடம் சும்மா இருந்துவிட்டு இப்போது விழா? கேட்கலாம்! எங்க ஊரிலே தேர் இருக்கும். சும்மாவே கிடக்கும். திடீர்ன்னு ஒரு வருஷம்
அது போல் தான் இதுவும். ஏதோ இத்தனை நாள் நாங்கள் பாட்டுக்கு ஏதோ செய்து கொண்டு இருந்தோம். இவ்வருடம் `நீங்கள்` விழாவெடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்கள். பாருங்கள் இப்போது எல்லோருக்கும் மகிழ்ச்சி.
இது வாணி தொழில் அல்லவோ. எனவே எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று எண்ணும் போது ஒரு புதிய உற்சாகம், உத்வேகம்.
முதுசொம் என்றால் என்ன?
பரனூர் பெரியவர் ஒரு கதை சொல்லுவார். சிறு குடிசை. இவன் கட்டிய நம் பொக்கிஷம் நம் முன்னோர் பன்னெடும் காலமாய் சேர்த்து வைத்திருக்கும்
பூமிக்குக் கீழே சொத்து இருக்குன்னு யாராவது காட்டணும்ல்ல?
அதைத்தான் இத்தனை நாள் தமிழ் மரபு அறக்கட்டளை செய்து வருகிறது. The
இப்போது எத்தனையோ முயற்சிகள் நடக்கின்றன. வாழ்த்துக்கள். அதற்கெல்லாம்
சிங்கப்பூர் மாநாட்டில் எனது பாசுர மடல்களுக்காக கவனம் பெற்றேன். சிங்கை
அப்போதெல்லாம் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்து பாதுகாக்க முடியும்
சான்பிரான்ஸ்ஸிகோ மாநாட்டில் ஜியார்க் ஹார்ட் வானாரப்புகழ்ந்தார்.
சென்னை தமிழினி 2000 மாநாட்டில் இணையமும், இலக்கியமும் எனும் ஒரு
கணையாழி ஜெகந்நாதன் கையோடு என்னை அழைத்துப் போய் ஐராவதம் மகாதேவனுக்கு அறிமுகப்படுத்தினார்.
சுஜாதா, சென்னை இலக்கியச் சிந்தனை வட்டத்தில் என்னைப் பேசச்சொன்னார்.
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் அமைந்தது டாக்டர் அப்துல் கலாமை சந்தித்து முதுசொம் பாதுகாப்பு பற்றி எடுத்துச் சொன்னது! நானும் சுபாவும் சில மணி நேரங்கள் அவருக்கு எல்லாவற்றையும் காட்டி எடுத்துச் சொன்னோம். அதன் பலன்? ஐயா டெல்லி போனவுடன் உடனே ஓலைச்சுவடி பாதுகாப்பை அமுல் படுத்தினார். இந்தியாவெங்கும் விழிப்புணர்வு பரவியது!
எட்டுத்திக்கும் இச்சேதி பரவ வேண்டும். உரிய காலத்தில் பரவ வேண்டும். இதை எல்லாம் செவ்வனே செய்திருக்கிறது தமிழ் மரபு அறக்கட்டளை. அதுவே
இவ்வருட விழாவின் மிக முக்கிய சிறப்பாக நான் கருதுவது, முதுசொம் கொண்டோர் அதை வழங்க, முதுசொம் ஆர்வலர் அதை மின்னாக்க, முதுசொம் விழிப்புணர்வோர் அதற்கு விழா எடுப்பதுதான்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் என் முதுசொம் பணியில் முதல் தோழர். என்னை
டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் சும்மா வேடிக்கை பார்க்க மின்தமிழுக்கு
தேனீயின் உற்சாகம் தேனீ போலத்தான். மின்தமிழுக்கு வந்ததிலிருந்து தன்னை இன்னம்புரான்! எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான். இங்கிவனை
யுகமாயினி சித்தனின் பங்கு வித்தியாசமானது. பத்திரிக்கை ஆசிரியராய்
தேவ்! வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமை கொண்டு எங்களுக்கு
அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி செய்தார். அது போல் நம் ஆலயங்கள் சிறக்க
இத்தனை ஜாம்பவான்களும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதுவே இவ்வருட
முத்தாய்பாய் மின்தமிழ் அரங்கம் தாரகைகளால் ஜொலிக்கிறது. என்ன பாக்கியம்!
நம் கதையின் இன்னும் சில பக்கங்களை சுபா வாசிக்கிறார். அவர் பேச்சைக் http://www.tamilheritage.org/kidangku/thfday/suba27082009.mp3
மேலும் வரும்...
Narayanan Kannan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
திட்டம் 1
ஆங்கில மடலாடற்குழு துவங்குவது. கூகுள் தளத்தில் துவங்கலாம். அழகு
இன்னம்புரானுக்கு பிடித்த விஷயத்தைப் பேசுவோம். மதுரைத்திட்டம் உருவான பின் எங்களுக்குத் தோன்றியது, தமிழ் மரபு
இந்தியாவில் செயல்படும் மரபு அணில்களுக்கான பயணச் செலவைக்கூட இப்போது வழங்க முடியாத நிலை. இன்னம்புரான் சொல்வது சரிதான்.
இதன் சிக்கல் அறிந்துதான் மதுரைத்திட்டம் 100% தன்னார்வ செயற்பாடாக
ஒரு காப்பு நிதி நமக்கு வேண்டுமெனில் சிலவற்றை யோசிக்கலாம். இது அரசு
வேறு யோசனைகள் இருந்தால் சொல்லவும்.
உடனே கையில் செக்கை வைத்திருப்போருக்கு இரண்டு யோசனைகள்!
இதையெல்லாம் விட முக்கியமான உளவியல் ஒன்றுண்டு. மதுரைத்திட்டம் இதுவரை சிக்கலில்லாமல் நடைபெறுவதற்கான ஒரே காரணம் அங்கு காசை எதிர்பார்த்து யாரும் செய்வதில்லை. காசு காரியத்தைக் கெடுக்கும் என்பது எங்கள் அனுபவம்.
யோசியுங்கள்...
Sat, Aug 29, 2009 at 8:56 AM திட்டம் 3
உத்தமம் கருத்தரங்கிற்கு வந்து குவிந்திருக்கும் கட்டுரைகளை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது எழுந்த எண்ணங்கள். தமிழ் கூறும் நல்லுலகம் கணினி வளர்ச்சியில் உஷாராகத்தன் உள்ளது. தேவையான
அப்போதுதான் நமது சேகரங்களின் மதிப்பு உலகிற்குத் தெரியவரும்.
உதாரணமாக, நான் களப்பணிக்கு தஞ்சைப் பல்கலைக்கழகம் போயிருந்த போது அங்கிருந்த ஓலைச்சுவடிகளை வாசிக்கும் OCR ஒன்றை சென்னை மேனேஜ்மெண்ட் கல்லூரி ஒன்று தயாரித்து ஆங்கிலேயர் காலத்தில் வரி, வசூல் எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள். நாம் புத்தகத்தில் இருக்கும் எழுத்தை வாசிக்க தடவிக்கொண்டு இருக்கும் போது இவர்கள் ஓலையை வாசித்து விட்டனர்! எனவே தமிழ்நாடு நினைத்தால் எதையும் சாதித்துவிடும். அச்சமயத்தில் நல்ல, நல்ல நூல்களை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.
எனவே இவ்வருட முக்கியத்துவம் நாம் ஓலைச் சுவடிகளுக்கும் தர வேண்டும். நீங்கள் அறிந்த பெரியவர்கள் நல்ல நூல்களை ஓலை வடிவில் வைத்திருந்தால் அது திராவிட மொழி எதிலிருந்தாலும் (இதில் கிரந்தமும் சேர்த்தி என உணர்க) நாம் பாதுகாக்க வேண்டும். சர்வ தேச நிதி பெற தென்னாசிய கலாச்சாரத்தில் நமக்கு அக்கறை என்று காட்டிக்கொள்வது நலம். சர்வக்ஞருக்கு சிலை வேண்டாம். நாலு நல்ல கன்னட கிரந்தம் நம் சேகரத்தில் இருந்தால் போதும். சிலை செய்வதை விட இது எளிது ;-) சரி..யோசியுங்கள்! |
| Last Updated on Sunday, 30 August 2009 11:45 |
பிற வளங்கள்

த.ம.அ 8ஆம் ஆண்டு -27/08/2009

