
| உ.வே.சாமிநாதய்யர் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Sunday, 02 May 2010 13:48 |
|
தமிழ்த்தாத்தா
தந்தையிடம் தனிப்பயிற்சி
கல்லூரி ஆசிரியர்
பதிப்புப்பணி
1888 ஆம் ஆண்டு பத்துப்பாட்டு நூலையும், 1892 இல் சிலப்பதிகாரத்தையும், பிறகு புறநானூறையும், 1898 இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டார். இவருடைய நூல்கள் யாவும் பல ஓலைச்சுவடிப் பிரதிகளை முறையாக ஆராய்ந்து, திருத்தமான பாடங்கண்ட பிறகே வெளிவரலாயின. இதற்காக இவர் மேற்கொண்ட உழைப்பு ஆண்டு கணக்கிலாகும்.
சென்னை அடைந்த பயன்
பின்னர், தில்லையில் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அமைத்த மீனாட்சிக் கல்லூரியின் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஐயர் பல பதவிகளையும் பட்டங்களையும் பெற்றார்.
பட்டங்களும் பதவிகளும்
'பாரத தர்ம மகா மண்டலத்தார்' அவையினர் இவருக்கு 'திராவிட வித்யா பூஷணம்' (திராவிடக் கலையழகன்) என்னும் பட்டத்தையும், காஞ்சி காமகோடிபீடத் தலைவர் அவர்கள், 'தாட்சிணாத்ய கலாநிதி' (தெற்கத்திய கலைச் செல்வன்) என்னும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்புச் செய்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் ஐயாயிரம் வெண்பொற் காசுகளை வழங்கி அவரை வாழ்த்தினர்.
ஐயவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய சென்னைப் பல்கலைகழகம் அவருக்கு 'டாக்டர்' (இலக்கியப் பேரறிஞர்0 பட்டத்தை வழங்கியது. இப்பட்டத்தைப் பெற்ற ஐயரவர்கள் தான் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்றும் இது தமிழுக்குக் கிடைத்த மதிப்பு என்றும் மிகுந்த அடக்கத்துடன் கூறினார்.
சென்னை, அண்ணாமலைநகர், மைசூர், காசி, திருவனந்தபுரம், ஆகிய இடங்களிலுள்ள பல்கலைத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த ஐயரவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக்குழுத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றினார். இவருடையத் தமிழ்த் தொண்டினைப் பாராடாதார் இல்லை என்றே கூறலாம். மகாகவி பாரதியார் இவரை நேரில் கண்டு வாழ்த்திய பாடல்களே இதற்குப் பெருஞ்சான்றாகும்.
என்றும்,
என்றும் உணர்ச்சிப் பெருக்கோடு இவரை வாழ்த்துவர் பாரதியார்.
தமிழ் நூலாக்கம்
கல்லூரியாசிரியர் வேலையைத் தவிர மற்றக் காலங்களில் எல்லாம் நூல் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த ஐயரின் நூல்கள் பலப்பல. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை மட்டுமின்றிப் பல நூல்களையும் அவர் வெளிக் கொணர்ந்தார்.
ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட ஐயரவர்கள் நல்லுரைக்கோவை, புதியதும் பழையதும், நினைவு மஞ்சரி, தமிழ்நெறி விளக்கம், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், தியாகராயச் செட்டியார் வரலாறு, போன்ற பல அரிய உரைநடை நூல்களையும், எழுதி வெளியிட்டு உள்ளார். இவ்வாறு அவர் 90க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார். இத்துடன் அவர் ஆயிரக்கணக்கான சுவடிகளையும் சேகரித்துள்ளார்.
தமிழரின் பெருமையைப் பறைசாற்றும் பெரு நூல்களான சங்க இலக்கியங்களை இவர் அள்ளித் தந்ததும், பொது அறிவுக்களஞ்சியங்களான உரைநடை நூல்களை இவர் படைத்துத் தந்ததும் தமிழாய்வு செய்யும் பலருக்கு இன்றும் பயனளித்து வருகிறது.
தன்னடக்கம்
இத்தனைப் படைப்புகளை அளித்த அவர் இறுதிவரை மிக்க அடக்கத்துடனும், ஆரவாரமின்றியும், அமைதியுடனும், நிதானமுடனும் செயலாற்றியதுமே நாம் அறியத்தக்கதொரு சிறப்பாகும்.
புதுமை நோக்கு
தனிச்சிறப்புகள்
தமிழ்நூல்களைப் பலரும் வாங்கிப் படிக்க வேண்டுமென மிகக் குறைந்த விலையில் அவற்றை அவர் அச்சிட்டு வெளியிட்டது மற்றொரு சிறப்பாகும். தாம் 44 ஆண்டுகள் வரை ஆய்ந்து வெளியிட்ட ’தக்கயாகப்பரணி’ (552 பக்கங்கள்) நூலுக்கு விலை ரூ.4.00 என்றும், தாம் 37 ஆண்டுகள் வரை ஆய்ந்து வெளியிட்ட 1132 பக்கங்கள் கொண்ட ‘பெருங்கதை’ நூலுக்கு ரூ. 7.50 என்றும் வழங்கியது இவர் தம் தமிழுணர்வைக் காட்டும். இவ்வாறே பிற பதிப்புகளையும் இவர் அமைத்தார்.
அறிஞர்கள் கருத்துரைகள்
”ஐயரவர்கள் தேடித் தொகுத்து வைத்திருக்கும் அரிய நூல்களைத் திருத்திய முறையில் பதிப்பிடுவதானால், சிறந்த தமிழறிஞர்களுக்குப் பல தலைமுறைக் காலம் உளங்கவர்ந்த வேலை இருந்து கொண்டே இருக்கும்” என்பர் பேராசிரியர் சு. வையாபுரிப்பிள்ளை அவர்கள்.
”ஆங்கிலக் கல்வி இல்லாதவராயினும் இவர் நூல்களை அச்சிட்ட முறை ஆங்கிலம் கற்றவர்க்கெல்லாம் வியப்பு விளைக்கும் என்பர்” பேராசிரியர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்.
1937 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பாரதீய சாகித்திய பரிஷத்தின் மாநாட்டில் காந்தி அவர்கள் தலைமை வகித்தபோது ஐயரவர்கள் வரவேற்புரை வாசித்தளித்தார். அதைகேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், “தமிழிý வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ?” என்று சொன்னாராம்.
இவ்வாறு கற்றோரையும் மற்றோரையும் எளிதில் கவரச் செய்யும்படியாக ஐயரவர்கள் விளங்கினார். இவருடைய தன்னலமில்லாத் தமிழ்ப் பணியே இதற்குக் காரணமாகும். |
பிற வளங்கள்



