Monday 21st of May 2018

thiruvika-intro-tamil PDF Print மின்னஞ்சல்
Administrator ஆல் எழுதப்பட்டது   
Tuesday, 25 November 2008 21:37

"... உங்கள் அருணெறி உலகெலாம் பரவப்பொவது உண்மை. மேல்நாடும் கீழ்நாடும் ஒன்றுபட்டு ஈனப் போகும். உலகு உங்கள் அருணெறியையே தழுவும்..." (திரு.வி.க:1930: சைவத்தின் சமரசம்).

நமது தமிழ் மரபு அறக்கட்டளைக்கு திரு.வி.க. அவர்கள் அளித்த வாழ்த்தோ இது!

சான்றோர்கள் பலர் வாழும் நெறியை நமக்கெல்லாம் உணர்த்தியிருக்கிறார்கள். சிலர் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். உணர்த்தியும், வாழ்ந்தும், மிக்க சிலர் வழி காட்டியிருக்கிறார்கள். அவ்வாறு பற்பலத் துறைகளில் கலங்கரை விளக்காக திகழ்ந்த அரிய மனிதர், திரு.வி.கல்யாணசுந்தரம் ( 26.08.1883 - ‍ 17.09.1953).

திரு.வி.க. அவர்கள், "புலவர்க்கும் புலவர்; எழுத்தாளகளுக்கும் எழுத்தாளர்...(அவர்களை) இணைக்கும் பாலமாக அவரது வாழ்க்கை இய‌ங்கியது..." என்கிறார், மு. வரதராசன் (மு.வ: 1972: தமிழ் இலக்கிய வரலாறு:15,16). தொழிலாள‌ர் உரிமையை முதல் முதலாக இந்தியாவில் 27. ஏப்ரல், 1918 அன்று நிலை நிறுத்திய திரு.வி.க, நாட்டுப்பற்று உந்த,  அரசியலில் புகுந்து, இதழியலில் ஆழ்ந்து, தமிழை அரியாசனத்தில் அமர்த்தினார்.
தமிழ் உரை நடையின் தந்தை இவரே. பெண்ணியம், சமுதாய சீர்திருத்தங்கள், சமரசம், காந்தீயம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய அவர், கடைசி மூச்சு வரை தன்னை மார்க்ஸிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டார். சமயமோ, திருவாரூர் சோழிய வேளாண் மரபைச் சார்ந்த சைவம். அறிந்து கொண்டதோ, கிருத்துவம், இஸ்லாம், பெளத்தம், சைன மதங்களின் சாராம்சம். வாழ்ந்ததோ வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் ஜீவகாருண்ய, சமரசக் கோட்பாடுகளுடன்!
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று ஐம்பது வருடங்களில், அயராது உழைத்து 55 நூல்களை வெளியிட்ட  திரு.வி.க. அவர்கள், ஏழ்கடலையும் கடந்து இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையை, கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் முன்பே வாழ்த்தியுள்ளார் என்று நாம் பெருமிதம் கொள்வது, கற்பனை அல்ல.  இதற்கு ஆதாரமாக, யான்  ஒரு மேல்நாட்டு மேற்கோளை  சொல்ல விரும்புகிறேன். " நமது முன்னோர்களான இலக்கியச்சிற்பிகள் நம்மிடம் தானே, தமது இறவா வரத்தை விட்டுவிட்டு சென்றார்கள். ( டி.ஏஸ். எலியட்: மரபும், தனி மனிதனும்). 
- ஸ்ரீ.செளந்தரராஜன் (22/11/2007)
"It is truly said: Your Right Conduct will spread across the Globe. The West and the East shall meet.  The World shall look forward to your Ethics..." - Thiru.Vi.Ka: 1930: Saivism Reconciled Oh!
Is this Thiru.Vi.Ka. greeting our Tamil Heritage Foundation!
Mentors who taught us Wisdom are many.  Some, among them led exemplary lives and taught by example.  Rare, some did both. Thiru.Vi.Kalyanasundaram (26.08.1883 - 17.09.1953) is the beacon light for us in many spheres.  Describes as "...the preeminent scholar among scholars, the preeminent writer among writers...the bridge for them was his life..." (Mu.Varatharaachan: 1972: History of Tamil Literature:15, 16),Thiru.Vi.Ka.was also the founder of trade unionism in India on April 27. 1918.
The magnet of patriotism drew him to politics and Tamil Journalism.  It was he, who had enthroned modern Tamil prose. Thiru.Vi.Ka's service to feminism, social reforms, the spirit of reconciliation and Gandhism is profound.  He held fast to his Marxism till he breathed his last. His religion was Saivisim in the Thiruvarur Solizhiya Velan Marabu (Tradition). 
He was well-versed in the intricacies of Christianity, Islam, Buddhism and jainism also. His chosen spiritual path was that of Compassion and Reconciliation, preached by the mystic, Ramalinga Adigalar. He brought out 55 books in a span of fifty years, working indefatigably. 
His life was one of service.  We are not imagining in perceiving his Blessings unto us, in a passage written seventy years ago in a different context.  I cite in support none other than T.S.Eliot in his Tradition and the Individual, "...not only the best, but the most individual parts of his (writer's) work may be those in which the dead poets, his ancestors assert their immortality most vigorously...".
- Mr.Soundararajan (22/11/2007)
Last Updated on Wednesday, 26 November 2008 00:17
 

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved