Sunday 20th of May 2018

Home வரலாறு சிங்கை ஆலயங்கள் வைரவிட காளியம்மன் ஆலயம்
வைரவிட காளியம்மன் ஆலயம் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 20 June 2009 19:24

வைரவிட காளியம்மன் ஆலயம்

கிருஷ்ணன், சிங்கை

 

 

காளி எனும் சொல்லுக்குக் கருமை நிறம் பொருந்தியவள், பால ரூபிணி என்றும் பொருள். கருமையான
நிறத்துடன் மிகுந்த கோர வடிவுடையவள் காளி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனாலும் அவள் கருணையே வடிவானவள் என்றும் கூறுகின்றன. எங்கும் வியாபித்து இருப்பவள் காளி. அவள் கருமை நீலம் கொண்டவள். கடலைப் பார்க்கும்போது அது நீல நிறமாய் காட்சியளிக்கும்.கடல் நீரைக் கையிலேந்தி பார்க்கும் போது நீல நிறம் மாறியிருக்கும். இதன் பொருள் அவள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளாள் என்று பொருள்.

 

 

 

 

ஏழாவது கர்ப்பமாகப் பிறக்கவேண்டிய கிருஷ்ணனின் கர்ப்பத்தினை எட்டாவது கர்ப்பமாக மாற்றி அமைந்ததால் கருமாரியாகப் பெயர் பெற்றாள். சூரியன் மறைந்தாலும், பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் மறையாது என்று எதற்கும் அஞ்சாது நாடு ஆண்ட வெள்ளையர்கள், அம்மனுக்கு மட்டும் மிகவும் அஞ்சி நடுங்கினார்கள். அம்மை நோய் என்று கேள்விப்பட்டாலே இருநூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர். பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி, தன்னைச் சரணடைந்த ஏழை மக்களின் வினையை வேப்பிலையால் நீக்கி வருவது கண்கூடு. தமிழ் இலக்கியத்திலும்,பக்தி இலக்கியத்திலும் சரி தனித்தன்மைக்குத் சான்றாக விளங்குகிறாள். மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் பாடல்:-

 

"முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து அம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவன் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்"

 

கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து வந்த  இந்துக்கள் பலர் தாங்கள் வாழும் இடங்களில் பட்டினி,பசி, நோய், வறுமை ஆகியவற்றிலிருந்தும், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் கல்வியில் சிறந்து விளங்குதல், போன்றவைகளை வழங்கவும், தங்களைக் காக்கவும் தமது முன்னோர்கள்  இஷ்ட தெய்வங்களை வணங்கியும், அத்தெய்வங்களையே சிலைகளாக  வைத்து பூசித்தும் வந்துள்ளார்கள்.

 

வைரவிட காளியம்மன் ஆலயம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை  கடந்த ஆலயமாகும். சிங்கப்பூரில் பழைமை வாய்ந்த ஆலங்களில் இதுவும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் இவ்வாலயம் கினினி சாலையில் அமைந்திருந்தது. இந்த இடம் மலாயன் இரயில் என்னும் மலாயாவுக்குச் சொந்தமான நிலம். அந்தக் காலக்கட்டத்தில் இரயில் மூலம் மலாயா செல்லும் சிங்கப்பூர் மக்களுக்கு இந்த வழித்தடத்தின் மூலம்தான் சென்றுள்ளார்கள். தற்போது அமைந்திருக்கும்  தண்டாயுதபாணி கோயில் டோங் ரோட்டிலிருந்து ஆச்சர்ட் ரோடு வழியாகக் கிளினி ரோட்டைக் கடந்து சிங்கப்பூரின் வடபகுதியில் அமைந்திருக்கும் உட்லாண்டு வரை செல்லும்  இரயில் தடத்தில் இந்த வைரவிட கோயில் சிறு குடிலாக அமைந்து  இருந்தது.

 

ஆங்கில பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் சாலை போடும் பணி, இரயில் தடம் அமைக்கும் பணி, தோட்ட வேலை போன்ற உடல் உழைப்பு பணியில் மிகுதியாக இருந்தவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்த இந்தியர். எனவே தங்களுக்கு ஒரு வழிப்பாட்டுத் தலம் வேண்டுமென்று எண்ணி இரயில் நிர்வாகத்திடமிருந்து நிலம் வாங்கி  இந்த வைரவிட காளியம்மனை ஒரு சிறுகுடிலில் வைத்து வழிபட்டுள்ளனர்.

 

காலப்போக்கில் இரயில் தடம் விரிவாக்கத்தில் நிர்வாகத்திற்கு நிலம் தேவைப்படவே மாற்று இடமாக ஆச்சர்ட் ரோடு பகுதியில் கோயிலுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சில காலத்திற்குப் பிறகு மீண்டும் அரசாங்கம் அந்த இடத்தை நகர மேம்பாட்டுக்காக வேண்டவே, மாற்று இடமாக  1921-ல் , 21, சோமசட் ரோட்டில் இடம் கொடுக்கப்பட்டது.

 

அந்த இடத்தில் ஒரு சிறு வீடு போன்ற அமைப்பில் இந்த வைரவிட காளியம்மன் கோயில் இயங்கத் தொடங்கியது. 1933-ல் இவ்வாயலம் இந்து அறக்கட்டளை வாரித்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு 6-ந் தேதி, செப்டம்பர் மாதம் புதிய கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

 

8854 ச.அடி கொண்ட  வைரவிட காளியம்மன்  ஆலயம் 1970-ல் நகர சீரமைப்பு, விரிவாக்கதிற்காக அரசாங்கம் மீட்டு கொண்டது. அச்சமயம் இப்போது ஆலயம் அமைந்துள்ள இடமான தோ பா யோ, வீடமைப்பு பேட்டை துரித வளர்ச்சி கொண்டிருந்தது. ஆகவே, மக்கள் தேவைக்கும்,வழிபாட்டுக்கும் புதிய வீடமைப்பு பேட்டைக்கு அரசாங்கம் நிலம் கொடுத்தது. மீண்டும் புதிய ஆலயம் தோ பா யோ, லோரோங் : 8 ஖ல் எழுந்தது. 1986-ல் மார்ச் மாதம், 27-ம் நாள்  கும்பாபிஷேகம்  நடைபெற்றது.


 
இவ்வாலயத்தில் மூலவராக அன்னை வைரவிட காளியம்மன்  கருவறையில் வீற்றிருக்கிறாள். மற்றும் விநாயகர், சுப்ரமணியம் வள்ளியம்மன்,துர்க்கை,அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன்,பெரியாச்சி,மதுரைவீரன், கல்யாண சுந்தரரேசர், நவகிரகங்கள் என இவ்வாலயத்தில் வழிபாடும் நடக்கிறது.

 

குருவாயூர் ஐயப்பன் சந்திதியில் "துலாபாரம்" அமைந்துள்ளது.சிங்கப்பூரில் துலாபாரம் அமைந்த ஓரே
ஆலயம்  இதுதான்.

 

இங்கு சரஸ்வதி பாலர் பள்ளியும் முழு நேரமாக நடைபெறுகிறது. பொது நோக்கில் இலவச சட்ட ஆலோசனை சேவையும், சமூக சேவையும் வழங்கப்படுகிறது. முக்கிய விழாவாகச் சித்ரா பெளர்ணமி,பிரம்ம உற்சவம்,சந்தன குட அபிஷேகம்,பெரியாச்சி பூஜை,மகர விளக்கு, அங்காள பரமேஸ்வரி பெளர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றன.


ஆலய முகவரி
2001 Toa Payoh Lor 8 Singapore 319259
Tel: 6259 5238     Fax: 6258 7677
Email: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நன்றி :- சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்

 

 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved