
| எட்டயபுரம் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Thursday, 13 August 2009 21:42 |
|
கட்டுரை, ஒலிப்பதிவு, காணொளி, புகைப்படங்கள் : சுபாஷினி ட்ரெம்மல் May 9 எட்டயபுரத்தை நோக்கி
சென்ற ஆண்டு சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழில் எழுதத் தொடங்கியதுமே தனது அறிமுகத்தில் எட்டயபுரத்தையும் அறிமுகப்படுத்தி நம்மில் பலருக்கு இந்த சிறு நகரத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவரது பல மடல்களின் வழியும் அதன் பின்னர் தொடர்ந்த எங்களது gtalk, தனி மின்னஞ்சல் பரிமாற்றங்கள் மூலமாகவும் பல்வேறு சிறப்புக்களை இந்த நகரம் கொண்டிருக்கும் உண்மையை நான் தெரிந்து கொண்டேன்.
எட்டயபுர ஜமீன் மாளிகை
இணையத்தில் தேடியதில் விக்கிபீடியாவில் சில தகவல்கள் கிடைத்தன. ஆனால் இத்தகவல்கள் ஓரளவு அறிமுகமாக இருந்தனவேயன்றி எட்டயபுரத்தை அறிந்து கொள்ள உதவவில்லை. சீதாம்மா குறிப்பிட்ட அனுபங்களையெல்லாம் வாசித்த போது நேராக சென்று பார்த்தால் என்ன என்ற ஒரு எண்ணம் எனக்குத் தோன்றியது. இந்த எண்ணத்தை சீதாலட்சுமி அவர்களிடம் தெரிவித்த போது நிச்சயமாக சென்று ஜமீன் குடும்பத்தினரையும் சந்தித்து பேட்டி கண்டு வரவேண்டுமென்று மிகவும் ஊக்கப்படுத்தினார். எட்டயபுர ஜமீன் குடும்பத்தினருடன் இன்று வரை தொடர்பில் உள்ள இவர்கள் அமெரிக்காவிலிருந்து தமிழகத்தில் சென்னையிலும் திருநெல்வேலியிலும் உள்ள ஜமீன் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு எனது இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொண்டதோடு எனக்கு எட்டயபுரத்தை சிறு குறிப்புக்கள் மூலம் அறிமுகம் செய்தும் வைத்தார்.
அரண்மனையின் ஜெஜ்ஜை மாளிகை
திரு.கருணாகர பாண்டியன், திரு.இளசை மணியன், திருமதி.சாவித்ரி துரைராஜ், சுபா
இந்த அடிப்படை ஏற்பாடுகளின் துணையோடு நான் எனது தமிழகத்துக்கான பயணத்தை திட்டமிடலானேன். 2009 டிசம்பர் மாதம் என் அலுவலகத்தில் 17 நாட்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு தமிழகத்துக்கான பயண ஏற்பாட்டினைத் தொடங்கினேன். பயணம் உறுதியான போது எட்டயபுரத்துக்கானப் பயணத்துக்காக 4 நாட்களை ஒதுக்கிக் கொண்டேன்.
அன்புடன் |
| Last Updated on Monday, 31 January 2011 15:06 |
பிற வளங்கள்




