Friday 21st of October 2016

Home வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 29.அரண்மனை பொக்கிஷங்கள்
29.அரண்மனை பொக்கிஷங்கள் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 10 October 2010 07:54

10-10-2010

29.அரண்மனை பொக்கிஷங்கள்

 

வரலாற்றுச் சான்றுகளே சரியான சரித்திர உண்மைகளை அறிந்து கொள்ள உதவுபவை. அவ்வகைச் சான்றுகள் இல்லாத நிலையில் ஒரு சமூகத்தின் பாரம்பரிய உண்மைகளையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வதில் பெறும் சிரமம் ஏற்படும். தெளிவற்ற தகவல்கள் ஆய்விற்கும் உதவாதவை. சான்றுகளாக குறிக்கப்படும் பல்தரப்பட்ட ஆவனங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும் போதே அவை ஆய்விற்கு உதவுவனனவாக அமைகின்றன. அந்த வகையில் இன்றைய தமிழகத்தில் முன்னர் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அரசர்களின் காலத்தை, ஆட்சியின் போது நடந்த நிகழ்வுகளை அறிய  முற்படும் போது முறையான ஆவணங்கள் கிடைப்பத்தில் பெறும் சிரமம் இருக்கவே உள்ளது.
 
 
வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத நிலையில் முக்கிய ஆவணங்களாக இன்று நாம் கருதும் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுவர் ஓவியங்கள் போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையைக் காண நேரிடுகின்றது.  ஆலயங்கள் மட்டுமின்றி மற்ற பொது இடங்களிலும் இவ்வகை நிலை கண்கூடு. நமது சமூகத்தில் பொன்னாபரணங்களுக்கும் வைரம் வைடூரியம் போன்றவற்றிற்கு மக்கள் தரும் மதிப்பு  ஆவணங்களுக்கும் கலைச்செல்வங்களுக்கும் வழங்கப்படுவதில்லை என்பது வேதனை தரும் உண்மை.
 
இன்றைய கால கட்டத்தில் சிற்றரசர்கள், ஜமீன்கள் அரச குடும்பத்தினரின் வாரிசுகள்  தங்கள் பாரம்பரியத்தை விளக்கும் இவ்வகை ஆவணங்களை ஆய்ந்து அவற்றை அச்சுப்பதிப்புக்கு கொண்டுவருவதில் ஆர்வம் செலுத்த வேண்டியது அவசியம்.
 
 
 
 கருணாகர பாண்டியனும் அரண்மனை மேலாளரும்
 
 
 அரண்மனை தேர்கள் வைக்கப்பட்டுள்ள இடம்
 
 
எனது எட்டயபுரத்துக்கான பயணத்தின் போது கண் முன்னேயே இவ்வகை ஆவணங்களை அதிலும் குறிப்பாக நூல்களின் குவியல்களையும் அவை பாதுகாப்பற்று தூசி படிந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவழிந்து போவதையும் காணமுடிந்தது.
 
 
 
 ராமர் பட்டாபிஷேக சுவர் சித்திரம்
 
 
சுவரோவியங்கள் ஒரு புறம் அதன் வர்ணம் மறைந்து தெளிவு மங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக அரசவை பகுதியில் உள்ள ஒரு மிகச் சிறந்த ராமர் பட்டாபிஷேக சுவரோவியம்.  மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்ட ஒரு கைவேலை. வர்ணங்கள் மாத்திரமின்றி சித்திரத்தின் ஆபரணங்கள் embose செய்யப்பட்ட வகையில்  ஓவியத்தில்  காட்சியளிக்கின்றன. அருகில் சென்று பார்க்கும் போது மேலும் தெளிவாக தெரியும் இந்த ராமர் பட்டாபிஷேகக் காட்சி சுவர் சித்திரம் மிக பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது. 
 
 
 
நுணுக்கமான வேலைப்பட்டுடன் கூடிய சுவர் ஓவியம்
 
 
 
இதனைப்போல அரண்மனை கதவுகளின் மேல் பகுதியில் கஜலக்ஷ்மி, சரஸ்வதி தெய்வங்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை கொஞ்சம் கொஞ்சமாக வர்ணம் நீங்கி தெளிவில்லாமல் ஆகி வருகின்றன.
 
 
 
 
அரண்மை அரசவையைத் தாண்டி நேராக உள்ளே செல்லும் போது அரண்மணை பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பகுதி வருகின்றது. இங்கே நான் கண்ட காட்சி என்னை மலைக்க வைத்தது. சில அலமாரிகள், அதன் பக்கத்தில் இரும்புப் பெட்டிகள். அவை முழுதும் நூல்கள். சில இரும்புப் பெட்டிகள் மூடாமல் திறந்து இருந்தன. அவை முழுதும் நிரம்பி கீழேயும் சில நூல்கள் கிடந்தன. பக்கத்திலேயே சில ஆவனங்கள்; பத்திரங்கள் ஆகியவையும் அங்கே கிடந்தன. ஆனால் அவை எதனையும் தொட்டு திறந்து பார்க்க முடியாத அளவிற்கு தூசி. தூசி படிந்து வாசிப்பாரற்று கிடக்கும் இந்த நூல்களில் ஏதேனும் முக்கிய செய்திகள், அரண்மனை கடிதங்கள், பத்திரங்கள் போன்றவை இருக்கலாம். அவை வரலாற்றுத் தகவல்களை தருவதில் நிச்சயம் உதவக் கூடும். 
 
 
 பெட்டிகளில் நூல்கள்
 
 
 
 பெட்டிகளின் மேலும் சுற்றிலும் கொட்டிக் கிடக்கும் ஆவணங்கள்
 
 
 
திறந்து கிடக்கும் நூல்களும் பிற ஆவணங்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
அரண்மனை மேலாளரிடம் மேலும் வினவியபோது அரண்மனையின் அனைத்து ஓலைச் சுவடி நூல்களையும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு அரச குடும்பத்தினர் வழங்கியிருப்பதாக கூறினார். அவை அங்கு முறையாகப் பாடுகாக்கப்படுகின்றது என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். ஆனாமல் அரண்மனைக்குள் யாருக்கும் உபயோகப்படாமல் இருக்கும் இந்த நூல்களையும் ஆவனங்களையும் அரச குடும்பத்தினர் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தமிழ் மரபு அறக்கட்டளையின் கோரிக்கையாகவே குறிப்பிட விரும்புகின்றேன்.
 
 
 
 
 
நூல்களை விட்டு சற்றே உள்ளே சென்றால் அரண்மனை தேர்கள் சில. இன்னமும் அதன் வனப்பு குறையாமல் அவை இருக்கின்றன.  ஆனால் அவையும் முழுதும் தூசி படிந்து தொட்டுப் பார்க்க முடியாத நிலையில் காட்சியளிக்கின்றன.  வெவ்வேறு வடிவிலான தேர்கள் இவை. தூசி தட்டி துடைத்து வைத்து இவற்றை பாதுகாக்கப்பட வேண்டியவை.
 
 
 
 
 
 
 
 
 தூசி படிந்த தேர்கள்
 
 
 
 
 
 
அரண்மனையில் பயன்பாட்டில் இருந்த தேர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 ஒரு மூலையில் இருக்கும் இளவட்டக் கல்
 
 
 
யாக சாலை
 
 
இவற்றை பார்த்து இப்பகுதியில் இருந்து வெளியே வரும் போது அங்கே அரண்மணைக்குள் ஒரு 75 வயது மதிக்கத்தக்க ஒரு மாது அமர்ந்திருந்தார். அவரை அணுகி அவரைப் பற்றி விசாரித்ததில் அவர் ஏதோ ஒரு வகையில் அரண்மனைக்கு சொந்தமென்பதும் அங்கேயே இன்றளவும் ஒரு மூலையில் குடியிருக்கின்றார் என்றும் தெரிந்து கொண்டேன். இவரும் பாதுகாக்கபப்ட வேண்டியவர் தான்!
 
 
 
தொடரும்..
 
அன்புடன்
சுபா

 

Last Updated on Sunday, 10 October 2010 08:21
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  October 2016  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
       1  2
  3  4  5  6  7  8  9
10111213141516
17181920212223
24252627282930
31      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved