Friday 20th of April 2018

தஞ்சை பெருங்கோயில் விளக்கம் - 2 |
![]() |
![]() |
![]() |
Subashini ஆல் எழுதப்பட்டது |
Friday, 17 September 2010 21:59 |
பேட்டி: டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்
பேட்டி, புகைப்படம், ஒலிப்பதிவு: சுபா
ஒலிப்பதிவு செய்யபப்ட்ட நாள்: 17.12.2009
ராஜராஜேச்சரம் அமைப்பு - பகுதி 2
தஞ்சைப் பெரிய கோயிலின் கோட்டைச் சுவர், வாயில் மற்றும் அதன் வளைவு மண்டபம் ஆகியவற்றை முதல் பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள பகுதிகளைப் பற்றிய விளக்கம் இப்பகுதியில் தொடர்கின்றது.
வாயிலை கடந்து செல்லும் போது 5 அடுக்குகளுடன் கேராளந்தகன் திருவாயில் எனப்படும் கோபுரம் வருகின்றது. அதற்கு அடுத்து 3 அடுக்குகளுடன் உள்ள இராஜராஜன் திருவாயில் இருக்கின்றது.
1.தட்சிண மேரு என்னும் ஸ்ரீவிமானம்
பாகம் 1 :
ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் என்னும் பிரகதீஸ்வரப் பெருமாள் கோயில் கொண்டு திகழும் நெடிதுயர்ந்த ஸ்ரீவிமானத்தின் பெயர் தட்சிணமேரு என்பதாகும். இது தரையிலிருந்து 216 அடி உயரமுடையதாகும். இப்பகுதி பீடம் முதல் ஸ்தூபித்தளம் வரை கருங்கற்கொண்டு கட்டப்பெற்றதாகும். உள்ளே சிவலிங்கம்; அதைச் சுற்றி நான்கு சுவர்கள். அதற்குப் பிறகு மேலும் நான்கு சுவர்கள் இப்படி வடிவமைக்கபப்ட்டுள்ளன. இவ்வளவு உயரமான இந்த விமானம் முழுவதும் உட்கூடு பெற்றது. வாயகலமான கூம்பு போன்ற குவளையைத் தலைகீழாகக் கவிழ்த்தது போன்ற அமைப்புடையது இப்பகுதி.
கருவரையின் நடுவே பெரிய லிங்கத்திருமேனி உள்ளது. இதன் உயரம 13 அடி ஆகும்.
![]() ![]() ![]() ![]() ![]() ![]() 2.வெவ்வேறு விதமான லிங்கங்களைப் பற்றிய விளக்கம்!
பாகம் 2 :
லிங்க வடிவமாக இறைவன், பிரபஞ்ச வடிவமாக அருவ நிலையாக இருக்கும் இறைவன் என வெவ்வேறு வகையில் ஆலயம் அமைக்கபப்ட்டிருகின்றது.அருவுருவமான இறைவனைக் காட்டி, அடுத்து உருவமற்ற சூன்யத்தையும் காட்டி பின்னர் உருவகப்படுத்தி சிவ நடராஜராக பரிணமிக்கும் தத்துவத்தை உணர்த்தவும் இங்கே ஓரிடத்தை உருவாக்கியிருக்கின்றான் இராஜ ராஜன். அதனை விளக்கமாகச் சொல்கின்றார் இப்பகுதியில்.
3. நீர்வடிவமான கோபுரம் கங்கா புத்திரர்கள் 8 பேரை இக்கோபுரத்தில் காணலாம்.
பாகம் 3 :
ஊணக்கண்களால் பார்க்க முடியாத மஹா மேரு பர்வதத்தை உருவகப்படுத்தி கற்பனையில் வடிவங்களுக்கு உரு கொடுத்து அதனை சிற்ங்களாக இந்தக் கோபுரத்தில் வடிக்கச் செய்திருக்கின்றார் இராஜராஜன். முன்னர் இப்பகுதியில் தங்கத்தினால் போர்த்தியிருந்ததாக இராஜராஜனின் கல்வெட்டு கூறுகின்றது. பினன்ர் மாலீக் கபூர் காலத்தில் தங்கம் சுரண்டி கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.
4.சதாசிவலிங்கம்
பாகம் 4 :
ஆலயத்தின் முழு வடிவத்தையும் சதாசிவ லிங்கமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
கருவறையின் சுற்று அறைக்கு மேல் பகுதியில் மற்றுமொரு சுற்று அறை உள்ளது. கீழ்ச் சுற்று அறையின் சுவரில் சோழர் கால ஓவியங்களும், நாயக்கர்கால ஓவியங்களும் உள்ளன. மேலறையில் சிவபெருமானின் கரணச்சிற்பங்களின் தொகுதி உள்ளது. 108 கரணச்சிற்பங்களில் 80 மட்டுமே பூர்த்தியாக உள்ளன. மற்றவை செதுக்கப்பெறவில்லை. சுற்று உள் வட்ட வடிவமான அறையின் மேல் பகுதி எப்போதும் குளிர்ச்சியாக இருக்குமாம். காற்றை பிரதி நிதிப்பதாக இவ்வமைப்பு உள்ளது.
இந்த கோபுரத்தில் உள்ள சிலைகளை பெரிதாக்கபப்ட்ட உருவங்களை கீழே காணலாம்.
|
Last Updated on Friday, 17 September 2010 22:30 |
பிற வளங்கள்
