
| தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Wednesday, 17 November 2010 20:59 |
|
தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்
தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டிகள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன.
முனைவர் பத்மாவதி
பாகம் 1 :
பாகம் 2 :
பணியில் சேர்ந்த பொழுது முதலில் இவருக்கு ஆய்வுக்கு வழங்கப்பட்ட ஊர் தஞ்சை. இங்கு தான் மேற்கொண்ட பணியைப் பற்றி விளக்குகின்றார். குழுவாக பணியை எப்படி ஆய்வாளர்கள் மேற்கொள்வர் என்று விளக்குகின்றார். கல்வெட்டுக்கள் ஆய்வுகள் செய்யும் வழிமுறைகள், எழுத்துக்களைக் கண்டு பிடிக்கும் முறை, எழுத்துக்களை கையாளும் முறை. என சரளமாக தனது அனுபவங்களை வழங்குகின்றார்.
பாகம் 3 :
எவ்வாறு கல்வெட்டுக்களை ஆய்வு செய்வது என்ற தனது பேச்சினை தொடர்கின்றார். பல்லவர்கள், பாண்டியவர்கள் கட்டிய கோவில்களின் கட்டுமானம் எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்று விளக்கமும் வருகின்றது இப்பதிவில். நிறைய கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கும் போது எல்லாவற்றையும் ஒரேவரிசையில் படித்து விட முடியாது. மாறாக ஒவ்வொன்றாகப் படியெடுத்து பின்னர் அவை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு அவையனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்று தமது ஆய்வுப் பணிகள் பற்றி குறிப்பிடுகின்றார் இப்பகுதியில்.
நன்னிலம் வட்டக் கல்வெட்டுக்கள் என்ற மூன்று தொகுதிகளை முழுதாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். அதனைப் பற்றிய குறிப்பும் இப்பகுதியில் வருகின்றது.
பாகம் 4 :
பாகம் 5 :
கல்வெட்டு பயிற்சி நிறுவனத்தின் செயல்பாடுகள். தொல்லியல் துறை அறிஞர்.டாக்டர்.இரா.நாகசாமி இவரது வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். தமிழ் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபடுவது மேலும் சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில் அவர்களுக்குத் தொல்லியல் ஆய்வுத் துறையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்
பாகம் 6 : பயிற்சிகளின் போது எப்படி கல்வெட்டுக்களை வாசிப்பது, எந்த சிலைகள் எந்த தெய்வங்களின் வடிவங்கள் என சிலைகளைப் பார்த்து கண்டுபிடிப்பது போன்ற விஷயங்களை எப்படித் தெரிந்து கொள்வது போன்ற சில தகவல்கள் இப்பகுதியில் வழங்கப்படுகின்றன. இவர்களின் ஆய்வுக் குழுவினருக்கு ஈconography எனப்படும் ஆய்வு முறையை அறிந்து கொள்வதற்கு டாக்டர்.நாகசாமி வழங்கிய பயிற்சிகள் உதவியிருக்கின்றன. தேவநாகரி, வட்டெழுத்து, கிரந்தம் இவை அனைத்திலும் தீவிர பயிற்சி இவர்களுக்கு கிடைத்திருந்ததால் கல்வெட்டுக்களைப் பார்த்ததுமே கண்டுபிடிக்கும் திறன் வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்.
ஒரு கோயிலைப் பார்க்கும் போதே அதில் உள்ள விக்கிரகங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவை இந்த கோயிலை சார்ந்தவைதானா என்பதை உடனே அறிந்து கொள்ளும் திறனும் அனுபவத்தின் மூலம் கிடைத்திருக்கீன்றது.
ஒரு கோயிலின் கட்டிட அமைப்பு எப்படி அமைந்திருக்கும் என்ற விளக்கமும் இப்பகுதியில் வழங்கப்படுகின்றது. இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.
பாகம் 7 : ஆதித்த சோழன், பராந்தக சோழன் போன்ற மாமன்னர்களின் கட்டிடக் கலை சிலை அமைப்புக்கள் போன்றவற்றை நேரடியாக பார்த்து எவ்வாறு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்கள் பாடம் நடத்துவார் என்று இப்பகுதியில் விளக்குகின்றார்.
சோழர் காலத்து சிலைகளுக்கும், நாயக்கர் கால சிலைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை எப்படி கண்டு பிடிப்பது என்று விளக்குகின்றார்.
தனது ஆய்வுப் பணிகளின் ஆரம்ப காலகட்டங்களில் எளிமையான வடிவங்களான ஸ்ப்த கண்ணிகளை அடையாளம் காண்பதை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தையும் பின்னர் மிக எளிமையாக எல்லாவிதமான கலை வடிவங்களின் வே
தொடரும்..
|
| Last Updated on Monday, 24 January 2011 21:46 |
பிற வளங்கள்




