Tuesday 23rd of January 2018

எலுமிச்சை - CITRUS MEDICA. PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 03 January 2010 15:59

 

எலுமிச்சை

திரு.அ.சுகுமாரன்


        
 Nov 12, 2009


கோயில் என்றால்  எப்படி வைணவருக்கு ஸ்ரீரங்கம் சைவருக்கு சிதம்பரமோ அப்படியே சித்த மருத்துவத்தில் பழம் என்றால் அது எலுமிச்சையைத்தான் குறிக்கும்.  சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து  விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் த்ததுவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி,சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்றவற்றை ஐயந்திரிபுர  கற்றுணர வேண்டும்.  இவை அத்தனையிலும் எலுமிச்சை உபயோகம் உள்ளது.

 

மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்டஎலுமிச்சை ஏற்றது.
எலுமிச்சை வெறும் சாதாரண கனியல்ல மாம்பழம் வாழப்பழம் போல் உண்பதற்காக மட்டும் உருவானதல்ல.  அது ஒரு ஜீவனுள்ள கனி .கனிகளில் பறித்த பின்னும் ஜீவனுடன் இருப்பது எலுமிச்சைதான். அது மங்களகரமானது  . மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது.  அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது.


வேதங்களில் அதர்வண   வேதத்தில் முதலில் தேவதைகள், அதிதேவதைகள் ஆகியவற்றிற்கு பரிகாரப் பூஜைகள் செய்யும் போது எலுமிச்சைப் பழத்தை பலியிடுவது வழக்கம்.  அதற்குக் காரணம், அந்தப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது.  அதன் சக்திகள் அளப்பரியது .இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாது . மேலும்  எலுமிச்சை முன்பு வேறு ஜீவன்களை காவு கொடுத்து வந்த இடங்களில் அவைகளுக்கு பதிலாக  எலுமிச்சையை பலி கொடுப்பதை இன்னும்  பார்க்கலாம். அதே சமயம் யாராவது பெரியவர்களை பார்க்கப்போனாலும் அவர்கள் கையில் ஒரு  எலுமிச்சையை கொடுத்து ஆசி பெறுவது இன்னும் வழக்கத்தில் உள்ளது. வீடுகட்டி குடிபோகும் போது நிச்சயம் எலுமிச்சை பழத்தை நான்கு திசைகளுக்கும் காவு கொடுப்பார். இது வாஸ்து தோஷத்தையும் போக்கும்.


அது மட்டுமா? திருஷ்டி தோஷத்தைப் போக்க வணிக நிலையகளிலும் வீடுகளிலும் தவறாமல் எலுமிச்சை வாசலில்  இடம் பெற்றிருக்கும் . நமக்கு ஏதாவது குறை இருந்தாலும் எலுமிச்சையில் சக்தியை ஏற்றித் தரும் பழக்கமும் இன்னும் இருக்கிறது அதை .  மந்திரித்து தருவது என்பார்கள்
நாம் வாழ்த்து பெற பெரியவர்களை எலுமிச்சை தந்து பார்ப்போம் .அவர்கள் நமக்கு ஆசி அளித்து எலுமிச்சையை வழங்குவார்கள் . என்னமோ அதில் சக்தி இருப்பதை நம் மக்கள் தொன்மை காலம் முதல் அறிந்து உபயோகித்து வருகிறார்கள். வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமக்கு துணை வருவது  வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.


எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் , கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அதிகம்  உள்ள  வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது.


தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.


மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.. குளிக்கும் போது  எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம் .உடம்பும் சுத்தமாகும் .கிருமிகளும் நீங்கும்.


சந்தையில் எலுமிச்சைசோப்புகளும் ஷாம்புகளும் ஏராளம் உள்ளன. குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சை ஆகும் .  எலுமிச்சை, . பித்தத்தைப் போக்கும்,  தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும்,  தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும்,  காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய் போக்கும்,  வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்.

பழச்செடி ஒரு சிறிய செடிவகை ஆகும் .குறு மரம். இதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் பழுத்து காணப்படும்.  எலுமிச்சம் பழத்தின் தாயகம் மத்தியக் கிழக்கு நாடுகள் என்று கூறப்படுகிறது .. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு பரவியதாகவும்  கூறுகின்றனர்.

 

அதிக உஷ்ணமுள்ள பள்ளத்தாக்குகளில் இது ஒரு காட்டுச் செடி போல வளர்ந்து பழங்களுடன் காட்சியளிக்கிறது. இந்தப் பழம் சாதாரண காய்கறிகளைப் போல் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது.
பல வகையான எலுமிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் நாம் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை ஆகிய இரண்டை மட்டும்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.
 மூலிகையின் பெயர் :- எலுமிச்சை.
தாவரப்பெயர் :- CITRUS MEDICA.
 தாவரக்குடும்பம் :- RUTACEAE.
பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பழம்

 

உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது.   தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். .உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. 

 

காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.  டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண் ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சல் காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும். வாயுவை அகற்றும் பசியை உண்டாக்கும்
விரல் சுற்றிக்கு உதவும்,  நீரிலும் , காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள “புளோபிளேன்“ என்ற சத்தில் உள்ளது.

தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

 

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும்.
வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.


இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும். எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும்.  இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது. ர‌த்த அழு‌த்த‌ம் குறை‌ந்த தலை‌ச் சு‌ற்ற‌ல் இ‌ரு‌க்கு‌ம்போது எலு‌மி‌ச்சை சாறை‌க் குடி‌த்தா‌ல் உடனடியாக உ‌ங்களது ர‌த்த அழு‌த்த‌ம் சம‌நிலையை அடையு‌ம்.


மேலு‌ம், எலு‌மி‌ச்சை சாறு உட‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தி‌க்கு‌ம் ‌மிகு‌ந்த பய‌ன்தரு‌ம் ஒரு பானமாகு‌ம்.
வ‌யி‌ற்‌றி‌ல் பு‌ண் இரு‌ப்பவ‌ர்‌க‌ள் எலு‌மி‌ச்சை சாறை அ‌திக‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள கூடாது.  எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.


இயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும் விதைகள் மற்றும் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.  பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.


மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில சொட்டு எலுமிச்சை சாறு மிக விலை மலிவான முறையில் கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமி கொல்லியாகவும் பயன்படும் என்றுகண்டுபிடித்துள்ளதாகவும்  பரிசோதனைச்சாலையில், எலுமிச்சை சாறு மிகவும் சக்திவாய்ந்த முறையில், மனித விந்துவையும், ஹெச்ஐவி கிருமியையும் கொல்கிறது என்றும 
எலுமிச்சைச் சாற்றை கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு அல்லவென்றும், பழங்காலம் தொட்டு உபயோகப்பட்டு வருவது என்றும், சமீபத்தில் இது அறியப்படாமல் போய்விட்டது என்றும் அவர் கூறியதாக ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுமார் 300 வருடங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடல் பெண்கள், எலுமிச்சைச் சாற்றையே மிகவும் பொதுவான கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் தெரிகிறது
சில கோயில்களில் ஸ்தல விருஷமாகவும் எலுமிச்சை மரம் இருக்கிறது. 
 
எலுமிச்சை உண்மையில் ஆத்மாவின் பிரபஞ்ச  சக்தியை சேமிக்கும்  ஒரு சிறிய storage battery  ஆக விளங்குகிறது .சிறிது சேரம் ஒரு  எலுமிச்சையை கையில் வைத்து பிரார்த்தனை செய்து ஒரு நோய் வாய் பட்டவரிடம் தந்து பாருங்கள்.  அவரிடம் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். எலுமிச்சை இன்னும் புரிந்து கொள்ளவேண்டிய  ஒரு கனி .

Last Updated on Sunday, 03 January 2010 16:06
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  January 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
  1  2  3  4  5  6  7
  8  91011121314
15161718192021
22232425262728
293031    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved