
| தும்பை - LEUCAS ASPERA |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Sunday, 03 January 2010 17:49 |
|
தும்பை திரு.அ.சுகுமாரன்
Dec 11, 2009 தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போது பார்த்தீனியம் இடம் பிடித்து விட்டது.
தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. ஆனால் அந்தக்காலத்திலோ மன்னர் தும்பைப்பூ மாலை அணித்து விட்டால் நமது கருப்புப்பூனைகள் முண்டாசால் முகத்தை மூடினால் என்னவோ அது தான் . தும்பை பூ மாலை அணிந்து விட்டாலே அடுத்து வருவது போர் தான்.
தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே கூறி இருப்பதாகக் கூறுவர் . இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.
அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்; இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .
கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.
தாவரப்பெயர் : LEUCAS ASPERA.
தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசி வரத் தேமல் குணமாகும். தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு; இதன் பயன்பாடு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது.
The insecticidal property of the herb could be due to the presence of nicotine. Presence of alkaloid in *Leucas aspera *is all the more significant from the chemotaxonomic point of view. This is because Leucas aspera belongs to Labiatae, which is under the order Tubiflorae. Of the 26 families in this order, only 4 families are well represented for அல்கலோயட்ஸ் A few pyridine and pyrrolidine alkaloids have been reported in Labiatae. Presence of nicotine, a pyridine pyrrolidine alkaloid, in Leucas aspera is further supported and reinforced by this fact.
பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வுடன் இணைந்திருந்த பல மூலிகைகள் பற்றிய அரிய பாரம்பரியச் செய்திகளை காட்டுமிராண்டித்தனம் என அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் சொன்னதை நம்பி நாம் தொலைத்து விட்டோம்; இப்போது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் மீண்டும் தும்பையைத் தேடுகிறோம். |
பிற வளங்கள்



