Friday 20th of April 2018

தாமரை - Lotus PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 03 January 2010 17:31

 

தாமரை  

திரு.அ.சுகுமாரன் 
 

 
Dec 01, 2009 
 

தாமரை ஒரு   நீண்ட நாள் வாழும்  நீர்வாழ்  தாவரம்.   இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரை பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்டதாகவும்   எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டு வழிபாட்டுக்கும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால் இந்தியாவில் வேதத்திலேயே  தாமரை  . குறிப்பிடப்படுவதாகதெரிகிறது.

 


சோம என்பது தாமரையை  குறிக்கும் என நிறுவப்பட்டிருக்கிறது. டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ற தாவரவியலாளர் சோம தேவதையின் மேற்கூறிய வேத விவரணத்  தரவுகளின் அடிப்படையில் சோமத் தாவரத்தைக் கண்டடைய முயற்சி செய்தார். வேதம் சொல்லும் தாவரம் நிச்சயமாக இந்திய பண்பாட்டு மண்டலத்தில் ஒரு மிக முக்கியமான, மையமான இடம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அவரது முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் அவர் சிந்து சமவெளி பண்பாட்டிலிருந்து பிற்காலத்திய சைவ, வைணவ, பௌத்த பண்பாடுகளை ஆராய்ச்சி செய்யலானார். இத்தகைய முழுமையான பண்பாட்டு ஆராய்ச்சியின் விளைவாக அவர் சோமத்  தாவரம் என்பது வேறெதுவும் அல்ல தாமரை (Nelumbo nucifera) தான் என முடிவு செய்தார். இந்த வேத ஆன்மிகத்தின் மைய உருவகத்துக்கும் சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் முத்திரைகளில் காணப்படும் சித்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் சுட்டிக்காட்டுகிறார்:
சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும் இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப்பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது. இதன் இருபுறமும் காட்டப்பட்டுள்ள கொம்புள்ள பூதநாகங்கள் போன்ற விலங்குகள் ரிக்வேத தொன்மத்தை ஒத்துச்செல்கின்றன.( நன்றி தமிழ்  ஹிந்து .காம   ) 

 

திருமகள் அமரும் ஆசனமாகவும்  செல்வ வளத்தை குறிக்க இரு கரங்களிலும் தாமரை ஏந்திருபதும்  வெள்ளை தாமரையில் வீற்றிருப்பதாக சரஸ்வதி கூறப்படுவது.  இவைபோல்  அதிக தேவதைகள் கடவுளர்  கரங்களில்  தாமரை இடம் பெற்றுப்பதும் நோக்கத்தக்கது. மேலும் புத்தர்  உருவில் தாமரையுடன் நெருங்கிய   தொடர்பு  உண்டு  .பொதுவாக தாமரை ஒரு ஆன்மீக மலராக விளங்குகிறது
தாமரை வெள்ளை சிவப்பு என இரண்டு வகைப்படும் ஆனால் அல்லியில் பல நிற வண்ணங்கள் உண்டு.


தாமரை தான் இந்தியாவின் தேசிய மலர் !


வியட்னாமுக்கும் அதுவே தேசிய  மலர்  !


விஷ்ணுவை  பத்மா நாபா என்று அழைக்கிறோம் .அதாவது நாபியில் இருந்து வரும் தாமரையை உடையவர் .அதில் பிர்மா  வீற்றிருப்பார்.

 
விஷ்ணுவின் கண்கள் தாமரையுடன் ஒப்பிட்டு  பேசப்படும் .( கமலக் கண்ணன் )

 

தாமரையின்வேர்கள்  தரையில் சேற்றில்  இருந்தாலும் அதன் மலர்கள் நீரின் மட்டத்தில் காணப்படும்
இலையும் மலரும் நீரின் மட்டத்தில் அமையும் இதை திருவள்ளுவர். 

 
எப்படி நீரின் மட்டத்திற்கு தகுந்த படி தாமரை தண்டின் உயரம் மாறுமோ அப்படியே மாந்தர்களின் உள்ளத்தின் அளவே அவர்களின் உயர்வு என்கிறார். பகவத்கீதையிலும் தாமரை சேற்றில் இருந்து கிளம்பினாலும் எவ்வாறு அதன் மலர் மாசுபடாமல் இருக்கிறதோ அவ்வாறே .பற்றின்றி
 காரியங்கள் செய்பவனை பாபங்கள் ஏறுவதில்லை என கண்ணன் கூறுகிறார். இவ்வை எல்லாம் தாமரை இந்தியர் வாழ்வில் நீண்ட காலமாக இடம்பெற்றுள்ளன என்பதை சுட்டும்  சில சான்றுகள் .
 
வேறு பெயர்கள் கமலம் பத்மம் அம்பாள் சூரியா அம்புஜா கணவால் முதலியன 
 
பூ தண்டு இல்லை விதை அனைத்தும் பலனுள்ளது .
 
மூலிகைகளின் பலனை அறிய  ஒரு சின்ன சுருக்கு வழி கூட இறைவன் காட்டியிருக்கிறான் . ஒரு ரகசியம் கூறுகிறேன். ஒரு மூலிகை வடிவில்  மனித உறுப்பில் இதை ஒத்து இருக்கிறதோ அந்த உறுப்புக்கு அந்த மூலிகை நிவாரணமாக பயன் படும் .இது பெருவாரியாக ஒத்து வரும் .அதேப்போல் மூடிய தாமரை ஒத்திருக்கும் இதயத்தை தாமரை வலுவாக்கும் தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை   விட்டமின் சி பொட்டசியம்  பாஸ்பராஸ் விட்டமின்  B  6     தாமிர   சத்து  இவைகளுடன் 
மாங்கனீஸ்இவைகள் அடங்கியது .இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை.
 
இதன் மேல் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவி பயன்படுத்தவும்.தண்டு இளசாகவோ அல்லது முற்றியதாகவோ எப்படிருந்தாலும் சமைத்தாலும்  ஒரே மாதிரி நறுக் நறுக் என்றுதான் தான் இருக்கும்.இதன் தண்டை பச்சையாகவே சாப்பிட்டால்  கூட நன்றாகயிருக்கும்.
உப்பு எப்படிதான் போட்டாலும் தண்டில் ஏறாது, உப்பில்லாமல் சப்புன்னு இருக்கும் எந்த தாமரை  எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை .அதேப் போல் சமைக்கும் போதும் அதில் உப்பு ஏறுவதில்லை. 

 

தாமரைத்தண்டை தோல்சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவவும்.

அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கார்ன்மாவு - 1 டீஸ்பூன் கடலைமாவு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் அனைத்துப் பொருட்களும் சேர்த்து பிசிறி 1/2 மணிநேரம் அப்படியே  விட்டுவிடவும் பின்  எண்ணெய்விட்டு வறுக்கவும்:இது வாழைக்காய் வருவல் மாதிரி இருக்கும் 
 

தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காயவைத்து  அவைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் இதய மைகள் கட்டுப்படும் .
 
தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப்பார்த்தால் அதனுள்
விதைகள் காணப்படும் .இவைகள் மிகப்படினமாக இருக்கும் .இந்த விதிகளை உடைத்து அதில் இருக்கும் பருப்பை சாப்பிட இதய நோய் தீரும் .இதயம் பலப்படும் .
சிறுநீரகங்களை  வலுப்படுத்தும்.
 
தாமரைத் தண்டை நல்ல விளக்கில் திரியாக உபயோகிப்பார்கள் அதை திரியாக உபயோகித்தால் செல்வா வளம் பெருகும். இதன் இல்லை பண்டைய நாள் முதல் உணவருந்த பயன் பட்டு வருகிறது .தாமரை இலையில் சப்பிட்டாலேபல வியாதிகள் தீரும் . முக்கியமாக நரை விரைவில் வராது .
 
 Lotus seeds are classified as astringent and benefits kidney, spleen, and heart. The astringent helps loss of kidney essence. The seeds are used to treat weak sexual function in men and leukorrhea in women. The seeds also helps in curing restlessness, palpitation and insomnia. Inside the seed is the green embryo the benefits the heart. The Lotus disorders are helpful in heart and liver disorders. It is prescribes as an antidote for mushroom poisoning. The leaves are used in combination with the other herbs to treat sunstroke, dysentery, fever and vomiting blood
 
நமது நாட்டைப் பொறுத்தவரை தாமரை ஒரு மூலிகை என்பதைவிட ஒரு மங்கலப் பொருளாகவே மதிக்கபடுகிறது. இந்திய அரசு வழங்கும் உயர் விருதுகள் எல்லாம் பத்மம் என தாமரையுடன் ஒன்றியே வரும்,பத்மஸ்ரீ பத்மபூஷன் மாதிரி
 
சித்தவைதியத்தை விட தாமரை ஆயுர்வேதத்தில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. அது என்னவோ உலகம் முழுவதும் எல்லா மதத்திலேயும் தாமரை ஒரு ஆன்மீக மலராகத்தான் மதிக்கபடுகிறது .

 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
30      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved