Tuesday 22nd of May 2018

நாவல் - SYZYGIUM CUMINI PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 01 November 2009 11:18

நாவல்

திரு.அ.சுகுமாரன்

 

Oct 27, 2009
 

நாவலோ நாவல் .!.. இந்த நாவல்த்தீவினிலே சக்கரை நோயை சற்றென்று நீக்கும்
நாவல் பழத்தைப்பற்றி இப்போது பேச வந்திருக்கிறேன் !
இப்படிதான் சொற்போர் ஆரம்பம் ஆகுமாம் !

 


கல்கி கூறுகிறார் ஆழ்வார்கடியான்  மூலம்.
இது கல்கியின் ஆழ்வார்கடியான்,  நம்ம கொரியா ஆழ்வார்கடியார் பற்றி இல்லை .,
என்ன இது ஆரம்பமே சரியில்லையே என்கிறீர்களா ?


ஜம்மு தீவே ,பரத கண்டே என பல மந்திரங்களில் அறிமுகம்  ஆகும் .
கங்கை ,சித்து சரஸ்வதி இவைகளின் கரைகளில் நாவற்ப் பழங்கள்
செழுத்து வளர்திருந்தன . நாவல் மரங்கள் இருபுறமும் இருந்திருந்தன.

 
காளிதாசனுடைய வரலாற்றில்  இரண்டு பாடல்கள் . 'குலுகுக் குலுகுக் குலு" ,"பளபப் பளபப் பள' என்பன அவற்றின் ஈற்றடியாக வரும்.


    ஜம்பூ பலாநி பக்வானி
    பதந்தி விமலே ஜலே
    கபி கம்பித ஸாகாயாம்
    குலுகுக் குலுகுக் குலு


புளியம்பழங்கள் முற்றிப் பழுத்திருந்தன. அவை கடினமான தரையில் விழுந்தன. அவை விழுவதற்கு மனிதன் கிளைகளை அசைத்து உதவினான். அவை விழும் ஓசை......... 'பளபப் பளபப் பள'". 


"நாவல்பழங்கள் முற்றிப் பழுத்திருந்தன. அவை நிர்மலமான தண்ணீரில் விழுந்தன. குரங்குகள் கிளைகளை அசைத்து அவை விழுவதற்கு உதவின. அவை விழுந்த ஓசை......'குலுகுக் குலுகுக் குலு'".


காளிதாசனுடைய வரலாற்றில் இன்னும் இரண்டு பாடல்கள் இதுபோலவே உண்டு. 'குலுகுக் குலுகுக் குலு" ,"பளபப் பளபப் பள' என்பன அவற்றின் ஈற்றடியாக வரும்.  வன வாசம் சென்ற ராம பிரான் கட்டில் இந்த பழங்களை விரும்மி சாப்பிட்டதாக காப்பியத்தில் கூறப்படுகிறது ,பகவான்ன் கிருஷ்ணனுக்கும் பிடித்த பழம் இது. அவர் இதை விரும்மி சாப்பிடுவதால் ,அவரும் அந்த வண்ணமே இருப்பதால் ஜாமுன் என அழைக்கப்படுகிறார் .இது கடவுளின் பழம் என்றே அழைக்கப்படுகிறது.


சமயப் பெரியார் திருஞான சம்பந்தர்கூட இறைவனைப் போற்றிப் பாடும்போது-
"வெண்நாவல் அமர்ந்துறை வேதியனை' என்று குறிப்பிடுகிறார்.


ஜம்புகேசுவரம் எனப்படும் திருவானைக் காவல், சர்வேஸ்வரன் எம்பெருமான் இறைவன் நாவல் மரத்தடியில் வீற்றிருந்து, நம்மை யெல்லாம் இறையாட்சி செய்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.


இது தவறாமல் விநாயகர் சதுர்த்தி ,கிருஷ்ணா ஜெயந்தி இவைகளில் இன்னும் இடம் பெறுவதை காணலாம் .


சுட்டப்பழம் வேணுமா ,சுடாத பழம் வேணுமா என அந்தக்குமரன்
அவ்வைப் பாட்டியை அலைகழித்த வரலாறு அனைவரும் தெரியும் .


பாருங்கள் ! திருமால் கூட திடீர் என ஒரு நாள் நாவல் பழத்தை கேட்டு விட்டாராம் .
ஏன்ன செய்வார்கள் பக்தர்கள்   , ! பாட்டாக பாடினார்களா என தெரிந்தவர்களைத்தான் கேட்கணும்.


ஸ்ரீபராசர பட்டரின் சீடரான் நஞ்சீயர் தாம் வணங்கும் திருவாரதனப் பெருமாளுக்கு ‘ஆயர் தேவு’ எனப் பெயரிட்டு (He gave the special name as he liked) வழிபட்டு வந்தார். அவருடைய ஆராதனைப் பெருமாளும் அப்பெயரை மிகவும் உகந்து ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்த அதிசயமான செயல் ஒன்றைச் செய்து காட்டினார். ‘எங்களாழ்வான்’ என்னும் மற்றொரு ஆச்சாரியருடைய கனவில் தோன்றிய அப்பெருமாள், தனக்கு நாவல் பழம் கொடுக்குமாறு வேண்டினார். அப்பொழுது எங்களாழ்வான் அப்பெருமாளை நோக்கி, ‘நாவல் பழம் கேட்கும் நீர் யார்?’ என்று வினவினார். அப்பெருமாளும், ‘நான் சீயர் மகனான ‘ஆயர் தேவு’ என்று பதில் உரைத்தார். இந்த அற்புதத்தை எங்களாழ்வான் நஞ்சீயரிடம் கூறி வியந்தார். ”‘உம்முடைய மகன் ‘ஆயர் தேவு’ எங்களைக் குடியிருக்கவிடாமல், ‘நாவல் பழத்தைக் கொடு’, ‘வெண்ணெய்யைக் கொடு’ என்றெல்லாம் துன்புறுத்துகிறான்.’ கூறி ஸ்ரீரங்கனின் சௌலப்பக் குணத்தை எண்ணி உருகினார்.


இனி விஷயத்துக்கு வருவோம். தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.  நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

 

நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.


Family Name : MYRTACEAE
Botanical Name : SYZYGIUM CUMINI
Common Name : EUGENIA JAMBOLANA, PLUM, BLACK PLUM, JAMAN, JAMBOLAN


நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

 

வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது.  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். 


சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.
நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.


மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.


நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது.  பித்தத்தைத் தணிக்கும்,
மலச்சிக்கலைக் குணப்படுத்தும்,  இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.  இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும்.  சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும்.
சிறுநீரகக் கற்கள் கரையவும்,  இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும்,
மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.


பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணிய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும். ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும்.

 

சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.


துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.


நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது,
இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.


இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்க்கும் என்பது லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது,
நாவல் பழத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று உருண்டை ரகம். இன்னொன்று நீள ரகம். இவற்றுள் நீள வடிவில் பெரியதாய் இருக்கும் பழவகையில்தான் இனிப்புச் சுவை அதிகம். உருண்டை ராகமே மருத்துவ குணம் உடையது.


பெரும்பாலான பழங்களை அப்படியேதான் உட்கொள்ள வேண்டும். நாவற்பழங்களை மட்டும் சிறிதளவ உப்புச் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.  கல்லீரலும் செரிமான உறுப்புகளும் நன்றாய் இயங்க பண்டைய மருத்துவரான சரகர் என்பவர் நாவல் பழத்தை சாப்பிடச் சொல்லியிருக்கிறார். ஆயுற்வேத மருத்துவத்தில் நீரிழிவு நோயாளிகள் குணம் பெற பின்வருமாறு செய்ய வேண்டும். அதாவது, நாவற்பழ மரத்தின் பட்டைகளை எரித்துச் சாம்பல் ஆக்கி அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.  அப்பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் அருந்த வேண்டும். பிறகு இரவு உணவிற்குப் பிறகு இந்தத் தூளை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்த வேண்டும். இப்படி அருந்தினால் நீரிழிவு குறையும். பிறகு தூளின் அளவை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும்.
ிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.
நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.


நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.


தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
 

நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.
மூன்று நாவல் இலையை விழுதாய் அரைத்து கட்டித் தயிரில் கலக்கி அதிகாலையில் விடாமல் மூன்று மாதங்கள் சாப்பிட்டுவர, முத்தான- சத்தான பிள்ளை உங்கள் வயிற்றில் தரிக்கும். இது அனுபவ  வார்த்தையாகும்.

 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved