
| மூலிகைமணி வேங்கடேசன் கண்ணப்பர் - I |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Tuesday, 13 April 2010 19:35 |
|
மூலிகைமணி கண்ணப்பரின் முயற்சிகள்: மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்களுடனான பேட்டி பேட்டி: திரு.அ.சுகுமாரன், சுபாஷினி ட்ரெம்மல் ஒலி, காணொளிப்பதிவு: சுபாஷினி ட்ரெம்மல் பேட்டி செய்யபப்ட்ட நாள்: 07.12.2009
மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன்
பாகம் 1 :
மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள்
பாகம் 2 : காப்புக் காரர் என இவர்கள் தகப்பனாருக்குப் பெயர் வந்ததற்கு காரணம் என்ன என்று திரு.சுகுமாரன் எழுப்பும் கேள்விக்கு இந்தப் பகுதியில் விளக்கம் அளிக்கின்றார் திரு.வேங்கடேசன். இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக சித்த வைத்திய மருத்துவர்களாக இருந்த செய்திகள், வழி வழியாக குடும்பத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சித்த வைத்திய முறைகள், இவரது பாட்டனார் ஐயாவு முதலியார் பற்றியும் தகவல்களை இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம். - ஆர்க்காடு நவாபு இவரது
பாகம் 3 :
சித்த மருத்துவர்களுக்குக் கொல்லி மலையோடு கூடிய உறவு மிகச் சிறப்பானது என்பதை விளக்கும் பகுதி இது. கோரக்கர் குகை பற்றிய செய்திகள், கோரக்கர் மலை வாகடம் நூலின் அடிப்படையில் இவரது ஆய்வுகள் அமைந்திருக்கும் தன்மைகள் பற்றிய தகவல்கள் இப்பகுதியில் உள்ளன.
இவரது தாத்தா ராமகிருஷ்ண முதலியார் காஞ்சிபுரத்து தேவதாசி வீதியில் தேவதாசிகளுக்குப் பால்பவினை நோய் ஏற்படுமானால் அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக இருந்திருக்கின்றார். மெல்லிய குரல் இருந்ததால் இவரை கீச்சு குரல் வைத்தியர் என்று அழைக்கப்பட்டிருக்கின்றார்.
பகுதி 1
மூலிகைமணி கண்ணப்பர்
பாகம் 4 : இப்பகுதியில் தனது தந்தையார் மூலிகைமணி கண்ணப்பர் பற்றிய தகவல்களை மேலும் பகிர்ந்து கொள்கின்றார்.
பாகம் 5 : திரு.கண்ணப்பர் மூலிகை மருத்துவத்தில் தனக்குள்ள தீவிர ஆர்வத்தால் மேற்கொண்ட பல்வேறு சுய ஆராய்ச்சிகளை திரு.வேங்கடேசன் விவரிக்கின்றார் இப்பகுதியில். அத்தோடு ஜோதிவிருட்ஷம், தில்லை விருட்ஷம் இரண்டைப் பற்றிய விளக்கமும் இப்பகுதியில் வழங்கப்படுகின்றது. திரு.கண்ணப்பர் நம் நாட்டு மூலிகைகள் என்ற தலைப்பில் தினமனியில் 1962 தொடங்கி 1970 வரை 200 மூலிகைகளை அறிமுகப்படுத்தி சாதனை செய்திருக்கின்றார். இது மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் மக்களை சென்றடைய உதவியுள்ளது.
பாகம் 6 : தமிழ் மரபு என்பது மூட நம்பிக்கைகளையும் பொய்யுறைகளையும் அடிப்படைகளாகக் கொண்டவைகள் அல்ல; தமிழர் பாரம்பரியம் சிறந்த கொடைகளைச் சமூகத்திற்குத் தந்திருக்கின்றது. |
| Last Updated on Saturday, 08 May 2010 23:04 |
பிற வளங்கள்






