Wednesday 22nd of November 2017

Home நிகழ்வுகள்-Events Details - மண்ணின் குரல் மாத வெளியீடு டிசம்பர் 2008

Email Print

நிகழ்வுகள்-Events

Event 

Title:
மண்ணின் குரல் மாத வெளியீடு டிசம்பர் 2008
When:
08.12.2008
Category:
Voice of THF Release

Description

வணக்கம் மின்தமிழ் நண்பர்களே!
 
இவ்வாண்டின் மண்ணின் குரல், இறுதி வெளியீடாக இம்மாத மண்ணின் குரல்  இதோ வெளியீடு காண்கின்றது.  வருகின்ற சில நாட்களில் நான் விடுமுறையில் செல்லவிருப்பதால் வழக்கத்திற்கு மாறாக ஒரு வாரம் முன்னதாகவே இதனை வெளியீடு செய்கின்றேன். .http://voiceofthf.tamilheritage.org
 
இம்மாத வெளியீட்டைச் சிறப்பிக்கும் அங்கங்கள்:
 
1.ஸ்ரீமதி மணிமகள் பாரதி அவர்கள் தமிழகத்தின் வழக்காடு மன்றங்கள் பட்டிமன்றங்கள் எனப் பல சொற்பொழிவு நிகழ்வுகளில் காணக் கூடியவர். இவரது இசைச் சொற்பொழிவுகள் பிரபலமானவை. இவரது பாடல்கள் சிலவற்றை தமிழ்த்தேனியார் பதிவு செய்து இவரை பேட்டி கண்டு அனுப்பியுள்ளார்.

2.கடந்த மாதம் நாம் கேட்டு மகிழ்ந்த, பலரால் மறக்கப்பட்ட தமிழ் பேரறிஞர் திரு.வி.கவைப் பற்றி  சிந்தனைப் பகிர்வினை தொடர்ந்து வழங்குகின்றார்  திரு. சௌந்தரராஜன்.  அழகிய உருவக விளக்கமாக தட்ஷிணா மூர்த்தி அமர்ந்திருக்கும் போதி மரமாக இக்காட்சி விவரணை செல்கின்றது.. கேட்டு மகிழ்வோம்.
 
3.சைவ சித்தாந்த கூடம் உருவாக்கத் திட்டத்தின் முதல் படியாக 2 சைவ சித்தாந்த விளக்கப் பதிவுகளை இணைத்திருக்கின்றேன். மலேசிய உளவியல் பேராசிரியர் சைவ சித்தாந்த அறிஞர் முனைவர் கி. லோகநாதனுடனான பேட்டிகள் இரண்டினை நீங்கள் இங்கு கேட்கலாம். இந்திய தத்துவ வரலாற்றினை அலசுவதாக முதல் பதிவும், சைவ குருமாற்கள் பற்றிய விளக்கமாக அடுத்த பகுதியும் அமைந்துள்ளன். மிக அருமயான தெளிவான விளக்கம் இது.

4. ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு - ஜெர்மனி திரு.குமரன் வழங்கும் வரலாற்றுச் செய்தியின் தொடர்ச்சி - புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் ஈழத்தமிழர்களின் தொழில் நிலை குறித்த விளக்கமாக இம்மாத பதிவு அமைந்துள்ளது.
 
5. திரு.நரசய்யாவுடனான பேட்டிகளின் இரண்டாம் பதிவு. இப்பதிவில் மதராச பட்டிணத்திற்கு இங்கிலீஷ்காரர்கள் வந்த வரலாற்றுச் செய்திகளை திரு.நரசய்யாதாவர்கள் நம்மோடு சுவைபட பகிர்ந்து கொள்கின்றார்.  
 
6.ஆல் இந்தியா ரேடியோ முன்னாள் இயக்குனர் திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்களுடனான  பேட்டியின் இறுதிப் பகுதி. தேவாரப் பாடல்களை விளக்கிப் பாடுகின்றார் இப்பேட்டியில். இப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனீயார் அவர்கள்.
 
 
இந்த புதிய சேர்க்கைகளைக் கேட்டு மகிழ மண்ணின் குரலுக்கு வாருங்கள்: http://voiceofthf.tamilheritage.org
 
இந்த வெளியீடுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved