Saturday 24th of February 2018

Home நிகழ்வுகள்-Events Details - மண்ணின் குரல் மாத வெளியீடு ஜனவரி 2009

Email Print

நிகழ்வுகள்-Events

Event 

Title:
மண்ணின் குரல் மாத வெளியீடு ஜனவரி 2009
When:
21.01.2009
Category:
Voice of THF Release

Description

 

வணக்கம் மின்தமிழ் நண்பர்களே!
 
இவ்வாண்டின் முதல் மண்ணின் குரல் இன்று வெளியீடு காண்கின்றது.  இந்த வெளியீடுகளைக் காண http://voiceofthf.tamilheritage.org
 
இம்மாத வெளியீட்டைச் சிறப்பிக்கும் அங்கங்கள்:
 
1.கடந்த 2 மாதங்கள் நாம் கேட்டு மகிழ்ந்த,  தமிழ் பேரறிஞர் திரு.வி.கவைப் பற்றிய  சிந்தனைப் பகிர்வினை தொடர்ந்து வழங்குகின்றார்  திரு. சௌந்தரராஜன்.  திரு.வி.க அவர்களுக்கு தேச பக்தனில் ஏற்பட்ட தொடர்பு, அங்கு அவர் சந்தித்த பிரச்சனைகள் என நம்மில் பலர் அறிந்திராத விஷயங்களை இந்த பேட்டியில்  திரு சௌந்ததரராஜன் பகிர்ந்து´கொள்கின்றார்.
 
2.சைவ சித்தாந்த கூடம் உருவாக்கத் திட்டத்தின் தொடர்ச்சியாக மேலும் 2 சைவ சித்தாந்த விளக்கப் பதிவுகளை இணைத்திருக்கின்றேன். மலேசிய உளவியல் பேராசிரியர் சைவ சித்தாந்த அறிஞர் முனைவர் கி. லோகநாதனுடனான பேட்டிகள் இரண்டினை நீங்கள் இங்கு கேட்கலாம்.  இந்திய தத்துவங்களும் மேலை தத்துவங்களும் என்ற தலைப்பில் ஒரு பேட்டியையும்,  கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த தத்துவங்கள்; எகிப்திய, நூபிய ஆலயங்களுக்கும் சைவ சித்தாந்த வழி முறைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியதாக அடுத்த பகுதியும் அமைந்துள்ளன. சைவ சித்தாந்த மற்றும் த்ததுவ சிந்தனைகளில் ஆர்வமுள்ளோருக்கு பயனளிக்கும்  அருமையான தெளிவான விளக்கங்கள்  இவை.


3. ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு - ஜெர்மனி திரு.குமரன் வழங்கும் வரலாற்றுச் செய்தியின் தொடர்ச்சி - புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் ஈழத்தமிழர்களின் தொழில் நிலை குறித்த விளக்கத்தின் இரண்டாம் பகுதியாக இம்மாத பதிவு அமைந்துள்ளது.
 
4.திரு.நரசய்யாவுடனான பேட்டிகளின் மூன்றாம் பதிவு. இப்பதிவில் மதராசில் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் இங்கிலீஷ்காரர்கள் வந்த விதம், மசூலிப் பட்டினத்தினத்திலிருந்து ஆந்திராக்காரர்கள் மதராசிற்கு கொண்டு வரப்பட்ட வரலாறு மற்றும் மதராசிற்கு வந்த முக்கிய நபர்கள் என பல விஷயங்கள்  திரு.நரசய்யா அவர்கள் நம்மோடு சுவைபட பகிர்ந்து கொள்கின்றார்.   
 
5.பொங்கலன்று வெளியிடப்பட்ட உழவுத் தொழில் தொடர்பான ஸ்ரீமதி வசந்தா அவர்களின்  பேட்டிகளின் முதல் பாகமும் இந்த மாத வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய சேர்க்கைகளைக் கேட்டு மகிழ மண்ணின் குரலுக்கு வாருங்கள்: http://voiceofthf.tamilheritage.org
 
இந்த வெளியீடுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved