Project Thalapuranam

 


தமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக தமிழக கோயில்களின் தலபுராணங்களை உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறது.

Welcome to Project Talapuranam of Tamil Heritage Foundation, London, UK.



இந்தியப் பண்பாடு காலம் கடந்து நிற்பதற்கு புராண, இதிகாசங்கள் முக்கிய காரணம். இந்திய மெஞ்ஞானிகள் கண்டுணர்ந்த அளப்பரிய பேருண்மைகளை, தத்துவங்களை எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் புராணம். கதை கேட்கும் பழக்கம் என்பது சுவையான மனிதப்பண்பு. எல்லா கலாச்சாரங்களிலும் கதைகளுண்டு. கதைகள் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் நடக்கிறது. இந்தப் பழக்கத்தை ஒரு யுத்தியாக பயன்படுத்தினர் இந்தியப் பெரியவர்கள். தத்துவங்களை இளகாப் பரிமாணத்தில் (abstract) கொடுத்தால் அது பழக்கப்படாத உள்ளங்களுக்கு போய் சேராது என்று கருதி, தத்துவங்களை கதாபாத்திரங்கள் மீது ஏற்றி புராணக் கதைகளாச் சொல்லிப் போயினர். எனவே புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது. கதைக்குப் பின்னாலுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாரம்பரியத்தில் கோயில் தலபுராணங்கள் விசேஷமானவை. தத்தம் ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவன் எல்லா வகையிலும் பேரூர் கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுப்பது தலபுராணங்கள். எல்லோராலும் காசி, ராமேஸ்வரமென்று போகமுடியாது, எனவே உள்ளூர் கோயில் எந்தவகையிலும் இப்பெருங்கோயில்களுக்கு சளைத்ததல்ல என்ற நம்பிக்கையைத் தருவன தல புராணங்கள். மேலும், ஐந்திணைகளாக உலகைப் பகுத்துக் காணும் தமிழ் மரபில், ஒவ்வொரு நில அமைவிற்கும் ஏற்றவாறு இறைப்பண்பு சற்று வேறுபடுவதாகக் கண்டனர். எனவே, வெவ்வேறு பிரதேசங்களில் இறைவனின் திருவிளையாடல் வித்தியாசப் படுகிறது. அதைச் சொல்வதே தலபுராணங்கள். மெய்யானிகளுக்கு அருள் மூலம் இறைவன் இக்காட்சிகளைக் காட்ட, அவர்கள் தலபுராணங்களை எழுதி வைத்தனர். எனவே இவை ஒருவகையில் மறை ஞான (mystical)க்காட்சிகளின் தொகுப்பு என்றும் கூறலாம். இவைகளுக்கு ஒரு கனவுத் தன்மையும் இதனாலுண்டு.

இத்தலபுராணங்கள், அக்கால வழக்கப்படி கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் புலமை உள்ளவர்களால் எளிதாக வாசித்துப் புரிந்து கொள்ளமுடியும்!

இத்தலபுராணங்கள் தாங்கும் புத்தகங்கள், சுவடிகள் அழிந்து வருகின்றன. சரியான பாதுகாப்பில்லாத சூழலில் இவைகளை இலக்க வடிவில் (digital media) சேமித்து வைப்பதே சாலச் சிறந்தது.

இம்முயற்சிக்கு மூலதனம் வழங்கி எங்களை ஊக்குவித்தவர், லண்டன் மாநகரில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர்.தண்டபாணி அவர்கள். லண்டன் நகரில் தமிழ்த் தொண்டு செய்து மிகப்பிரபலமான திரு.சுவாமிநாதன் அவர்கள் இம்முயற்சிக்கு பக்க பலமாக உள்ளார். இந்த அறக்கொடையை மேற்பார்வையிட்டு சென்னையில் செயல்படுத்தி வருபவர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்கள். இத்தலபுராண வலைப்பக்கங்களை உருவாக்கி மேற்பார்வை செய்பவர், ஜெர்மனியில் வாழும் சுபா அவர்கள். இம்முயற்சியில் புத்தகங்களை நகலெடுத்து, தட்டச்சு செய்து உதவியவர் சென்னையைச் சேர்ந்த திரு.லோகசுந்தரம் அவர்கள். இம்முயற்சியில் ஆர்வமுடன் இருந்து ஒருங்கிணைப்பவர்கள் டாக்டர்.கு.கல்யாணசுந்தரம் (ஸ்விட்சர்லாந்து); டாக்டர்.நா.கண்ணன் (தென் கொரியா).

This project is a continuation of our on-going digital efforts at archiving Tamil Heritage materials available all around the world. THF-UK has pioneered digitizing ancient tamil books from British Library. From a donation of British Pounds 500, we have initiated a project in Tamilnadu, India to digitize sacred texts of temples called 'Talapuranam'.

Indian temple tradation is one of the oldest in the world. A temple is the principle place of Hindu worship. It is also a place of festivity, an academy and a museum of Tamil art. Each temple has a oral history tradition called 'talapuranam' (ta) or 'sthala purana' (sk). This tradition is based on revelations, myths and legends. It carries with it historical notes as well. During Bakti movement in Tamilnadu, scholars were encouraged to record mystical events connected with each temple to form a local temple story or purana. Such puranas reveal the universality of divine presence. It has a peculiar impact on the local psyche that the local temple is no inferior to any famous temple in the region as the gods residing in their temple is equally powerful. Both Alwars and Nayanmars, the pioneering local saint poets sung poems about sacred temples, recollecting the local myths, adding values to Talapurana.

This project has collections of old books dealing with temple stories or recordings of oral tradition written in Tamil poetic style. This project was conceived by Dr.Thandapani of London, UK. His grant has aided in the collection and digitization of these rare books.

Mr.Anto Peter, Secretary, Tamil Heritage Foundation, India has supervised this project under the assistance of Mr.N.D.Logasundaram (India). Ms.Subashini Kanagasundaram (Germany) has designed and supervised the digital efforts, including this webpages. Dr.K.Kalyanasundaram (Switzerland) and Dr.N.Kannan (South Korea) have managed this project.

Google Groups Beta
Subscribe to மின்தமிழ்
Email:
Visit this group