back
e-mail
home
home





































































































Muthusom Music House

முதுசொம் இசையரங்கு

தமிழ் மரபு அறக்கட்டளை உங்களை இன்னிசைத் தமிழ் உலகிற்கு இட்டுச் செல்லயுள்ளது. நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம் மூசியை வைத்து தட்டிச் செல்லுதலும், சொகுசாக அமர்ந்து கொண்டு இசையைக் கேட்டு இரசிப்பதும்தான்!
Tamil Heritage Foundation will introduce the music of Tamilnadu in these pages. Just relax and enjoy the 'tamil music galaxy'

முதலிலேயே சொல்லிவிட வேண்டிய விஷமொன்று உண்டு. கீழ்ச்சுட்டும் அத்தனை வலைத்தளங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன. ஆங்கில அறிவின்றி தமிழ்க் கலைகளைப் பற்றி அறிய முடியாத ஒரு அவல நிலை தமிழ் மண்ணில் இருக்கிறது. அதே சமயத்தில் தமிழ்க் கலை என்பது எல்லைகள் தாண்டி உலகமயமாகிப் போய்விட்டது என்றும் இதைக் காணலாம். நாங்கள் பார்வையிட்ட போது சுட்டிக்காட்டும் வலைத்தளங்கள் வேலை செய்தன. வளரும் தொழில் நுட்பம் புதிய சவால்களை வீசிக் கொண்டே இருப்பதால் சில தளங்கள் வேலை செய்யவில்லையெனில் பொறுமை காக்க. எங்களுக்கு எழுதினால் ஒன்று அத்தளங்களை வரும் காலங்களில் தவிர்க்கலாம் அல்லது மாற்று வழி இருந்தால் கூறலாம்.

நாங்கள் தயார்! நீங்கள் தயாரா?

கர்நாடக இசை மெட்டுகள்
Classical and Semi-classical South Indian Music

பாரதி செல்லம்மாவின் 'தென் பாண்டித் தேவியர்' - மெல்லிசை மெட்டுகள்
Thenpandi Deviyar by Barathi Chellamma

தமிழ்க் காதலன் சி.சுப்பிரமணிய பாரதியாரின் 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்ற பாடலுடன் ஆரம்பிப்போமே! (இசை வடிவம்: கானக்குயில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி)
C.Subramaniya Barathi's 'centhamiz nAdenum pOthinilE' sung my legendary M.S.Subbulakshmi

தமிழ்க் கவி சுப்பிரமணிய பாரதி பற்றி அவரது மருமகன் கிருஷ்ணன் பேட்டி. தீபம் ஒளிபரப்பின் ஒலி வடிவம் (முதல் சில நிமிடங்கள் தவறிவிட்டன!)
There are several versions of biography of Barathi is available in print form and in film. His nephnew Mr.K.V.Krishnan in an interview to a local TV in Chennai reveals certain fascinating, hitherto unheared aspects of Barathi's family life. To listen to this interview which has lost first few minutes, click here .

வான்புகழ் வள்ளுவனின் குறளமுது (சில பாடல்கள்). இசை: இரகுநாதன், குரல்:மா.யோகேஸ்வரன். தயாரிப்பு: யோகராஜா. தமிழ் மரபு அறக்கட்டளைக்காக திரு.யோகராஜா வழங்கியிருக்கும் குறுந்தகடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. வேண்டுமெனில் விவரங்கள் அறிய திரு.நா.கண்ணனுக்கு எழுதவும்.
Thiruvalluvar is the greatest sage poet of classical Tamil literature. The Kural is multi-disciplinary and multi-dimensional as it makes a holistic approach to life. Mr.M.Yogeswaran has sung Tirukkural in 133 ragas, selecting the first and the last poem of 133 chapters. A sample from that CD is given for appreciation. We are thankful to Mr.Jogarajah of London, the co-producer of the CD who introduced this production to us. On a special arrangement with the artist a limited number of copies are available for sale. Please write to Dr.N.Kannan for further details.

வான்புகழ் வள்ளுவனின் குறளமுதை இசையமுதாகத் தந்த திரு. மா.யோகேஸ்வரனுடன் ஒரு சிறப்புப் பேட்டி. (நேர்காணல்-நா.கண்ணன்)

பாகம் 01 திரு.யோகேஸ்வரன் அவர்களின் இசைப் பயணத்தின் முதல் கட்டம் - தொடக்கம்-இன்னிசையுடன்!

பாகம் 02 குறளமுது உருவாக்கல் - மூலத்திலிருந்து பல பாடல்களுடன்!

பாகம் 03 மேலை உலகில் தமிழ் இசைக்கு இருக்கும் வரவேற்பு!

பாகம் 04 மேலை இசை-தமிழ் இசை ஒரு ஒப்பீடு! அவைகளின் தனிச் சிறப்புகள். இசை வாழ்வின் நம்பிக்கை!!

திரு.யோகேஸ்வரன் பற்றியும் அவரது திருக்குறள் இராகமாலிகை பற்றியும் மேலும் அறிய சொடுக்குக இங்கே! Artist M.Yogeswaran - special interview by Dr.N.Kannan in Tamil

Part I The musical beginning!

Part II The Tirukkural project!

Part III Tamil tunes in Europe and Americas!

Part IV East meets West!

to read more on Valluvar and M.Yogeswaran with a few photos click here!

தமிழ் இசை வாணி டி.கே.பட்டம்மாள் அவர்களின் பேத்தி ஸ்ரீமதி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் தீபம் தொலைக்காட்சிக்காக (இலண்டன்) அளித்த இசை விருந்திலிருந்து...
ஓம், ஓம் என..- ராகம்: தீபாவளி, தாளம்: ஆதி, பாடல்: கவியோகி சுத்தானந்த பாரதியார்
தருணம் ஈதையா - ராகம்: சிவரஞ்சனி, தாளம்: ரூபகம், பாடல்: பாபனாசம் சிவன்
காண ஆயிரம் கண் வேண்டும் - ராகம்: பீம்பிளாஸ், தாளம்: ஆதி, பாடல்: அருளவன்
ஸ்ரீனிவாச - ராகம்: ஹம்சாநந்தி, தாளம்: ஆதி, பாடல்: பாபனாசம் சிவன்
ஓம் சக்தி -ராகம்: பிருந்தாவனி, தாளம்-திஸ்ரஏகம், பாடல்: சுப்பிரமணிய பாரதி
சாந்தி நிலவ வேண்டும்..- ராகம்: திலங், தாளம்: ஆதி, பாடல்: சேதுமாதவராவ்

Click the above links to listen to Nityasri Mahadevan's songs (courtesy: Deepam TV-London)

மார்கழி என்றால் நமக்கு சட்டென 'ஆண்டாள்தான்' நினைவிற்கு வருவாள். இதோ அவள் பாடிய "திருப்பாவை முப்பதும்" - தப்பாமல் கேட்போமா? அப்படியே திருப்பாவை பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் சொடுக்குக இங்கே!
Winter months are devoted by ancient Tamils for Meditation. There are hundrends of hymns on the significance of this process. Listen to Andal's Tiruppavai sung by Srimathi.Vedavalli. If you read Tamil you may enjoy reading this article of Naa.Kannan on Tiruppavai

2005 டிசம்பர் முதல் நாத உபாசனை என்றொரு வலைத்தளம் தொடங்கியுள்ளது. அதன் மூலம் பல நல்ல தமிழ்ப் பாடல்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். "எந்தரோ மகானுபவ!" எனும் தியாகையரின் சொல்லுக்கு உயிர் கொடுக்கும் வண்ணம் நல்லது செய்யும் இவர்கள் தங்களை முன் நிறுத்தாமல் செய்வது கூடுதல் பாராட்டற்குரியது.
Visit Nadopasana to listen to selected works of Trimurthis and other composers from South India

மோகன்குமார் தனது வலைத்தளத்தில் கொஞ்சம் கர்நாடக இசை, கொஞ்சம் மெல்லிசை என்று தொகுத்து வைத்திருக்கிறார்
You may find a small collection of Carnatic music and light Carnatic music at Kumar's private collection

கர்நாடக இசை இரசிகர்களுக்கு விருந்தாக, கற்றுக் கொள்பவருக்கு ஒரு ஆரம்ப தளமாக இவ்வலைத்தளம் அமைகிறது.
A good collection of Carnatic music kritis available at Carnatic Krithis Audio Archive .

குமுதம் வழங்கும் திரையிசை, பக்திப் பாடல்கள், கர்நாடக இசை கேட்க!
Cini-music, Bakti-music and Carnatic-music at Kumudam Music

கொஞ்சம் பக்தி, கொஞ்சம் கர்நாடகம் என்று வழங்குகிறார்கள் பவித்ரா வலையகத்தார்!
Prominent Carnatic music artists are represented at Pavithra.net .

கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்களின் மேடைக்கச்சேரிகளில் சில இங்கு கேட்கக் கிடைக்கிறது!
K.V.Narayanasamy, Balamurali Krishna, Jesudas are a few names to mention. A collection of concert music is available at KarNATaka sangItam

எளிதான தேடு பொறி கொண்டு சினிமாப் பாடல்கள், பக்திப் பாடல்கள் மற்றும் கர்நாடக இசைக் கீர்த்தனைகளை வழங்குகிறது நாத அநுபூதி.
An excellent search engine helps to locate film music, tamil devotional and carnatic music titles at Nada Anuboothi

கர்நாடக இசை பற்றிய தெளிவுகள் (theory) கொண்ட வலைத்தளம். சிறப்பு அம்சமாக அமைகிறது, 'ராண்டார்கை' அவர்களின் சினிமாப் புகழ் கர்நாடக இசைக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள். சங்கீதம் ஒரு வணிகத்தளம் என்பதால் பாடல்களை முழுமையாகக் கேட்க முடியாது. படித்தறிய ஆங்கிலத்தில் நிறைய உள்ளது.
An excellent site for Music Theory. Sangeetham is a commercial site and hence we could hear uncompleted sample music only. However, plenty to learn.

முழுக்க முழுக்க படிக்க (கேட்க இல்லை) ஒரு வலைத்தளம். இசைக்கருவிகள் பற்றிய படங்களூடான விளக்கம் அருமை.கர்நாடிகா.வணி மூளைக்கு விருந்து.
Are you a theory freak? Then this is the site for you!

"தாமரைப் பூவினிலே சுருதியைத் தனியிருந்துரைப்பாள்" என்பது பாரதி கவிதை. சுருதியில்லாமல் இசையில்லை. சுருதி என்ற பெயரில் ஒரு இசை இதழ் வந்து கொண்டு இருக்கிறது. வாசித்துத் தெரிந்து கொள்ள நல்ல இடம்.
For those who are as yet unacquainted with it, Sruti, started in October 1983, is an English language monthly devoted exclusively to Indian music and dance. It is the flagship venture of the Sruti Foundation, a not-for-profit charitable trust based in Chennai. The Foundation is engaged in a number of other related activities as well, such as research studies, implementation of special projects and publication of books.

இந்தியர்களுக்கு அறிமுகமான அகில இந்திய வானொலித் தளம். அருமை.
This is the site of well known music for years! Yes! All India Radio

இத்தனை இசை கேட்ட பின் பாட ஆசையா? இல்லைக் குளியலறை பாகவதரா நீங்கள்? உங்கள் இசைக்குக் கூட இடம் வைத்திருக்கிறார்கள் சிஃபி.வணி!
Are you a bath-room singer? Send your recodings (not at the bathroom:-) to sify.com!

கர்நாடக இசை வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தோள் கோர்த்து வளர்ந்துள்ளது ஒரு நல்ல சேதி! தமிழிசையின் உச்ச அனுபவத்தை தருவதாக வாக்களிக்கும் தேவகி அய்யர் அமைத்திருப்பது பாரத்.வணி
Quite a high-tech music website! Ultimate Carnatic Music Page so says Devaki Iyer! Try out!

மதுரை ச.சுப்புலக்ஷ்மி என்பது தமிழிசையைப் பொறுத்தவரை ஒரு சரித்திரம். இசையின் அரசி என்று பண்டித ஜவகர்லால் நேருவால் புகழப்பட்ட எம்.எஸ் அவர்களின் பங்களிப்பை சாசுவதப்படுத்தும் ஒரு வலைத்தளம் வணிகத் தளமான இது விட்டு, விட்டுப் பாடல்களைச் சுயமாகத் தருகிறது!
A site dedicated to the works of legendary M.S.Subbulakshmi. It is a commercial site. No free music!

இப்போதெல்லாம் 'வாத்தியாரிடம்' போய் வாய்ப்பாட்டுக் கற்றுக் கொள்ளவே வேண்டாம் போலிருக்கிறது! ஆன்லைன் பாடங்கள்! நேரமும் ஆசையுமிருந்தால் கர்நாடிக்.வணி என்ற வலைத்தளத்தை மானசீகக் குருவாகக் கொள்ளவும்!
Are you a Carnatic music dummie? Then here is a site that offers several lessions to pick-up.

எம்.கே.தியாகராஜ பாகவதர் போன்றோர் பழைய கர்நாடக மெட்டுக்களில் இன்று பிரபலமாகியுள்ள 'மெல்லிசையை' திரையுலகிற்கு/தமிழகத்திற்குத் தந்தனர். இவருக்கென ஒரு இசைத்தளம் இருப்பது உங்களுக்குத் தெரியுமோ?
M.K.Thiyagaraja Baghavadar, shortly MKT is as popular as legendary M.S. There is a dedicated website for his works. We could listen to some real rare oldies here!

நீங்கள் பக்திப் பாடல் இரசிகரா? சீர்காழி கோவிந்தராஜன், டி.கே.பட்டம்மாள், கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பித்துக்குளி மற்றும் பலர் பாடியிருக்கும் பக்திப்பாடல்களும், கந்தர் சஷ்டிக் கவசம், அபிராமி அந்தாதி போன்ற சிறப்பு பக்தி இலக்கியமும் பாடலாக ராகம்.வணி யில் கேட்கக் கிடைக்கிறது.
Tamil devotional music sung by Govindarajan, Sulamangalam sisters, T.M.Soundarrajan and others are available for flawless listening pleasure at Raaga.com

முருகன் தமிழ்க் கடவுள், பண்டைய சங்கத்தலைவன் என்றாலும் அவன் கலியுக வரதனாக பல அமெரிக்கர்களை தன் அடியார்களாக்கியுள்ளான். அப்படியொருவர் அமைத்ததுதான் கௌமாரம் வலைத்தளம். பாடல்கள் என்று அதிகம் இல்லையென்றாலும் கந்தக் கடவுள் பற்றிய இணைப்புகள் நிரம்பவே உண்டு.
Kaumaram a dedicated website for Muruga worship is created by Patrick David Harrigan. A very informative site for Muruga baktas.

ஓதுவார்கள் ஓதும் தேவாரம், திருவாசகம் பாடல்களைக் கேட்கவும், அவர் போன்றோர் செய்யும் சொற்பொழிவுகளைக் கேட்கவும் உள்ளதொரு வலைத்தளம்.
This Page Contains Links to all the Thevaram - Audio. As www.Saivaneri.freeservers.com does not have enough space, we put the Audio here. Go on Enjoy Tamil Thevaram Audio with Porul Urai!

பக்தியெனும் மடந்தை தென்னகத்தில் தோன்றி, ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பேணி வளர்க்கப்பட்டு, பேதைப் பருவத்தில் கர்நாடகம், மராத்தி சென்று, குமரிப் பருவத்தில் குஜராத்தில் வாழ்ந்து, பின் வங்காளம் சென்றாள் என்றொரு சமிஸ்கிருத ஸ்லோகம் உண்டு. காரணம் பக்தி தோன்றியது தமிழ் மண்ணில்தான். இப்படி இந்தியா முழுவதற்கும் பக்தியென்னும் மாங்கனியைத் தந்த தமிழகம் ஒரு ஆண்டாள் உருவாவதற்கும், ஒரு புரந்தரதாசர் உருவாவதற்கும், ஒரு பக்த மீரா உருவாவதற்கும், ஒரு நரசிம்ம மேத்தா உருவாவதற்கும், ஒரு கிருஷ்ண சைதன்யர், ஒரு பிரபுபாதா உருவாவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது. இந்திய மொழிகளில் இப்பக்தி இன்னிசைகளைக் கேட்க உள்ளதொரு வலைத்தளம். இங்கு எம்.எஸ். பாடிய வேங்கடேச சுப்ரபாதம், ஸ்ரீரங்க புரவிகார, பாவயாமி மற்றும் பல நல்ல தமிழ் பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன. தமிழ்ப் பாடல் தேர்வு மிகக் குறைவானதே!
There is a Sanskrit sloka that says that Bakti was born in Tamilnadu, nurtured by the loving saints like Alwars & Nayanmars and left Tamilnadu as a teenager to Karnataka and Maharastra, lived in Gujarat as a young lady and reached Bengal when she was quite matured. Here is a site that gives you a chance to listen to this Bakti in all Indian languages! There is a selection, though little, in Tamil as well.

கடைசியாக தமிழ் கொஞ்சமேனும் தென்படும் ஒரு வலையகம். வேறு யாராக இருக்க முடியும்? வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் வலைத்தளம்தான் அது! இங்கு குறும்படங்களும் உண்டு. ஆனால் கணினி படுத்துவிடும் அபாயம் உண்டு. கவனம்.
Finally a homepage with at least a Tamil greeting! Yes, it is for cErkAzi kOvintharAjan!

அந்தக் காலத்தில் டூரிங் கொட்டகையில் சினிமா பார்த்துவிட்டு வரும்போது, பாடல்கள் அடங்கிய பாட்டுப் புத்தகம் விற்கும். சினிமாவிலும் கவிதை எஞ்சியிருந்த காலம். அதை நினைவூட்டுவது போல் சினிமா, பக்திப் பாடல்கள் அடங்கிய (வாசிக்க மட்டும்) ஒரு வலைப்பக்கம் இருக்கிறது!
Are you a lisner alone or a lover of lyrics as well? If you are both or the second type please click here for selected cinefilm and bakti geethams!

இணையம் என்பது குறுக்குச் சந்துகள் நிரம்பிய ஒரு பிரபஞ்சம். தென்னிந்திய இசைக்கு எத்தனையோ வழிகள். சில சுகந்தமான வழிகள் இங்கு உண்டு!
There are more roads to music. Visit Sugantham.com for more routes!

வளரும் வழித்தடங்கள். கீழ்க்காணும் சுட்டிகள் மேலும் பல இணைப்புகளைக் காட்டுகின்றன.
Click the following links for more information on South Indian music
Web Ring
Green spun
Carnatic Corner

நாட்டுப் பாடல்கள்
Folk music

சிப்பிக்குள் முத்து இருப்பது போன்று மரபுக் கவிதைக்குள் இசை இருக்கும். தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை 'பண்' வைத்துப் பாடப்பட்டமையினாலேயே காலத்தை வென்று நிற்கின்றன. புதுக் கவிதை தமிழுக்கு அறிமுகமானபின் இசைக்கும் புதுக்கவிதைக்குமுள்ள தொடர்பு பற்றிய கேள்விகள் எழுகின்றன. சினிமாப் பாடல்களில் புதுக் கவிதை ஆழமாக தடம் பதித்திருந்தாலும், இலக்கிய இதழ்களில் வரும் புதுக் கவிதைகளை யாரும் மெட்டமைத்துப் பாடுவதில்லை. அவை மெட்டுக்கு ஒத்துவராதவை என்றும் கருதப்படுகிறது. இச்சூழலில் புதுக்கவிஞர் விக்கிரமாதித்யனின் கவிதைகளை விருத்தம் போல் பாடுகிறார், நாகர்கோயில் கலைஞர் ஒருவர்.
Classical music and classical poetry are closely related, rather inseperable. But this can't be true for modern tamil poetry. Yet, people do sing modern tamil poetry in a way the 'viruththam' is sung in classical Carnatic music concerts!

கிராமிய மெட்டுக்களை வைத்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாகர்கோயில் கிராமிய மெட்டுகளைப் பாடுகிறார் திரு.
Folk music from the district of Nagerkoil - a sample




back to index