The following article appeared in the Jan-Feb 1999 issue of VALLUVAM, bimonthly Tamil Literary magazine and is reproduced here for the benefit of cyber Tamil Community. Details of this Tamil Literary bimonthly are as follows: vaLLuvam
Editor: pallaTam mANikkam, i. cuntaramUrti
published by: tirukuRaL paNpATTu aayvu maiyam,
kavitA nilayam, 31, paNipUNdAr veeti
tirumutukunRam, viruttAcalam - 606 001, Tamilnadu, India

வள்ளுவம்
இருதிங்கள் இதழ்,
திருவள்ளுவர் ஆண்டு 2030, தை - மாசி / சனவரி-பிப்ரவரி 1999, ப. 92/93
ஆசிரியர்
பல்லடம் மாணிக்கம், இ. சுந்தரமூர்த்தி
நெறியாளர் குழு
தமிழண்ணல், ச.வே சுப்பிரமணியன், இரா. இளங்குமரன், தி. முருகரத்தனம், மருதமுத்து

திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம்
கவிதா நிலையம், 31, பணிபூண்டார் வீதி,
திருமுதுகுன்றம், விருத்தாசலம் -606 001, தமிழ்நாடு

இதழ் விலை 25 ரூபாய்
புரவலர் ரூ 2000/-
நிறுவன உறுப்பினர் ரூ 1000/- ஆண்டு உறுப்பினர் ரூ.125திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்...

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி வடிவில் எழுதியிருப்பார்? இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவில் அவை அமைந்திரா என்பது தெளிவு. இதுகுறித்துப் பெரிதும் முயன்று ஆராய்ந்துள்ளனர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன் ஆகியோர்கள் இணைந்து இந்த ஆய்வுத்திட்டத்தினை மேற்கொண்டனர். காலந்தோறும் வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர்.

கி.மு. 250லிருந்து கி.பி. 250 வரையுள்ள (தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ் எழுத்து) காலத்தில் நம்முடைய தமிழ் எழுத்து வடிவமைப்பில் திருக்குறள் எப்படி எழுதப் பெற்றிருக்கும்? "ஊடலுவகை" அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களை அவ்வெழுத்து வடிவில் இதோ காணுங்கள். அன்றைய வரி வடிவத்திலும் இன்றைய வரி வடிவத்திலும் அக்குறள்கள்:

படம் காண சொடுக்குக இங்கே!

133. ஊடல் உவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்கு மாறு.

ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
உள்ளம் உடைக்கும் படை.

தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன்று உடைத்து.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

ஊடிப் பெருகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.--------------------------------------------------------------------------------

கி.பி. 557 முதல் கி.பி. 590 வரை அமைந்துள்ள காலகட்டத்தில் காணப்பெறும் வரிவடிவ அமைப்பு (சிம்ம விஷ்ணுவின் பள்ளன்கோயில் செப்பேட்டு வகையினது - பல்லவ மன்னர் கால எழுத்து)

படம் காண சொடுக்குக இங்கே!

111. புணர்ச்சி மகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

தம்மில் இருந்து தமதுபார்த்து உண்டாற்றால்
அம்மா அரிவை முயக்கு.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

அறிதோறும் அறியாமை கண்டாற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.--------------------------------------------------------------------------------

கி.பி. 737லிருந்து கி.பி. 795வரை அமைந்துள்ள தமிழ்வடிவ அமைப்பில் திருக்குறள் (இரண்டாம் நந்திவர்மன் காலத்தியது. பட்டத்தாள் மங்கல செப்பேடு வகை - பல்லவ மன்னர் கால எழுத்து)

படம் காண சொடுக்குக இங்கே!

104. உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ·துஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்து ஊண் மாலையவர்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

தொடிப்புழுதி க·சா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும்.

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.


Courtesy: Webpages of Tamil Electronic Library