ஜனகா





புனைப்பெயர்: ஜனகா சுந்தரம், ஜனனி
பிறப்பு: 11.8.1947 (தஞ்சை, தமிழ் நாடு)
கல்வி: சித்த மருத்துவத்துறை டிப்ளோமா
தொழில்: தனியார் பத்திரிக்கை நிருபர்

எழுத்து: 1962 முதல் எழுதி வரும் ஜனகா, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல், நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதை தமிழகத்திலிருந்து வெளிவரும் ராணி வார இதழில் இடம் பெற்றது.

நூல்கள்: "ஞானத் தழும்புகள்" (சிறுகதைத் தொகுப்பு); திருக்குறள் தொகுப்புரை (கட்டுரை நூல் - 1997/1998); பாரதியார் கவிதைகள் (கட்டுரை நூல்);

சிறுவர் நூல்கள்: கண்ணனின் துனிவு (1998); ஔவையார் அறநெறி - ஆத்திச்சூடி (கட்டுரை -1998); பைந்தமிழ் நாட்டு பழங்கதைகள் (கதைகள் - 1998)

சமய நூல்கள்: காரைக்கால் அம்மையார் வாழ்வும் இலக்கியமும் (1997 / 1998)

மேலும் 250 - க்கும் மேற்பட்ட இவருடைய சிறுகதைகள் மலேசிய நாளிதள்களிலும் தமிழகத்தின் மஞ்சரி, கலைமகள் போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன. வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் நேசன், மலேசிய முரசு ஆகியவற்றில் இவருடைய பல தொடர்கதைகள் வெளி வந்துள்ளன.தற்சமயம் தொலைகாட்சி நாடகங்கள் உருவாக்கத்தில் தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றார்.சிறப்புக் குறிப்பு: மலேசிய இந்து சங்கத்தில் பினாங்குப் பேரவையின் செயலாளராகவும், வட்டாரப் பேரவையின் தலைவராகவும் பல ஆண்டுகளாக பொறுப்பேற்று சேவை புரிந்து வருகின்றார்.



Designed by: Suba :-Copyright THF