ரெ. கார்த்திகேசு Ph.D





பிறப்பு: 24.8.1940;
கல்வி: B.A (Hons) in Indian Studies (1968 Malaya), M.Sc. in Journalim (1977 Columbia), Ph.D. in Communication (1991 Leicester)
தொழில்: ஓய்வு பெற்ற பேராசிரியர். 1962 - 1975 மலேசிய வானொலியில் ஒலிபரப்பாளர்; 1977 முதல் 1994 வரை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளார்; 1994 - 1998: பேராசிரியர், துணை டீன், துறைத் தலைவர்.

முகவரி: 356-W, Lengkok Pemancar, 11700 Gelugor, Penang, Malaysia.
தொலைபேசி: +60 4 6413016 ; +60 19 4142330
மின்னஞ்சல்: [email protected].


எழுத்து:

முன்னணிச் சிறுகதை எழுத்தாளர். ஏறக்குறைய 80 கதைகள் எழுதியுள்ளார். மலேசிய இதழ்களிலும், தமிழ் நாட்டின் "தீபம்", "கணையாழி" இதழ்களிலும் எழுதியுள்ளார்.

தொகுப்புகள்: "புதிய தொடக்கங்கள்" (1974); "மனசுக்குள்" (1995); "இன்னொரு தடவை" (2001).

நாவல்கள்: "வானத்து வேலிகள்" (1981); "தேடியிருக்கும் தருணங்கள்" (1993); "அந்திம காலம்" (1998); "காதலினால் அல்ல" (1999)

சிறப்புக் குறிப்புகள்: தமிழ்ப் புத்திலக்கியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். பல அனைத்துலகக் கருத்தரங்கங்களில் கட்டுரைகள் படைத்துள்ளார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தனிநாயக அடிகள் விருது பெற்றவர்; "அந்திம காலம்" நாவல் 1998-இன் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு "டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு பெற்றது.

மலேசிய மற்றும் ஆசிய பொதுமக்கள் தொடர்பு சாதனங்கள் பற்றி அனைத்துலகக் கருத்தரங்குகளில் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் கட்டுரைகள் படைத்துள்ளார். அவை ஆராய்ச்சி இதழ்களில் பதிப்பிக்கப் பட்டுள்ளன.



Designed by: Suba :-Copyright THF