மா. இராமையா





புனைபெயர்கள்: தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி
பிறப்பு: 30-6-1930
தொழில்: ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி.

முகவரி: LC255, Jalan Naib Long, 849000 Tangkak.

எழுத்து:

1948 முதல் எழுதி வரும் இவர் மலேசியாவின் மூத்த எழுத்தாளர் ஆவார். அதிகம் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கவிதைகளும் நாடகமும் எழுதியதுண்டு.

நூல்கள்:
சிறுகதைகள்: "இரத்த தானம்" (1953); "பரிவும் பாசமும்" (1979); "சங்கொலிச் சிறுகதைகள்" (1993); "திசை மாறிய பறவைகள்" (1998); ""மாவாசை நிலவு" (2000).

நாவல்கள்: "எதிர் வீடு" (1976); "மூங்கிற் பாலம்" (1965); "நீர்ச் சுழல்" (1958); "அழகின் ஆராதனை" (1992); "பயணங்கள் முடிவதில்லை" (1990); "சுவடுகள்" (1994); "மன ஊனங்கள்" (2001).

கட்டுரை: "மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு" (1978); "மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்" (1996).

கவிதை: "கவி மஞ்சரம்" (1976).

சிறப்புக் குறிப்புகள்: பட்டங்கள்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க விருதும் தங்கப் பதக்கமும். டத்தின் இந்திராணி இலக்கியப் பரிசு; மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை விருது, மாநில சுல்தானின் விருது ஆகியவை பெற்றவர்.


Designed by: Suba :-Copyright THF