இர.ந.வீரப்பன்





புனைபெயர்: வான்கதிர்
பிறப்பு: 1930
தொழில்: ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்

எழுத்து:

காலஞ் சென்ற இர.ந. வீரப்பன் 1953 முதல் எழுதியவர்; கட்டுரை, ஆராய்ச்சி, உருவகக்கதை, சிறுகதை, பாடல் என பல துறைகளில் எழுதியவர். தமிழ் இயக்கங்களில் முன்னின்று செயல் பட்டவர்.

நூல்கள் / கட்டுரைகள்:

"மலாய் தமிழ் ஆங்கில அகராதி"; "மா.செ.மாயதேவன் இலக்கியப் பணி"; "மா.இராமையா இலக்கியப் பணி"; "உலகத் தமிழர்"; "மலேசியத் தமிழர்"; "கானல் வரி"; "மலாய் மொழியில் தமிழ் மரபுகள்"; "மூன்று நாடுகளில் அறுபது நாட்கள்"; "உலகளாவிய தமிழ்"; "இராவண காவியம்"; "உலகத் தமிழ் பண்பாட்டியக்க வரலாறு" மற்றும் பல.

சிறப்புக் குறிப்புகள்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராகவும், தலைமை இயக்குனராகவும் இருந்து அவ்வியக்கத்தை உலகெங்கும் பரப்பியவர்; 29 நாடுகளில் பிரயாணம் செய்து அங்குள்ள தமிழர் நிலை குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மலேசியாவில் மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தையும் மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தையும் முன்னின்று இயக்கியவர்.

Designed by: Suba :-Copyright THF