Home | Tamil Page |

The joy of Tamil literature

தமிழின் இனிமை

Talks by S.Natarajan, London

(click "கவிதாரசம்" to enjoy the talk)


வெண்ணிலவே... பிடி சாபம்!!!

பங்கு செறிந்தன்ன பல் கதிர் இடை இடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்புஇடர் அறியா நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற்கவின் இழந்த என் தோள் போல்
சாஅய் சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே


பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்
திணை: நெய்தல்
கூற்று: நெட்டிடை கழிந்து பொருள் வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள், திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.
நற்றிணை பாடல் எண்: 196


கவிதாரசம்


வாழிய முருகே!

கடவுட் கட்சுனை அடையிறந் தவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி யொண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை யடுக்கப் பொற்பச் சூர்மகள்
அருவியின்னியத்தாடு நாடன்
மார்பு தரவந்த படர்மலி யருநோய்
நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே

நற்றிணை 34ம் பாடல்.
திணை: குறிஞ்சி
பாடியவர்: பிரமசாரி


கவிதாரசம்


கட்டுக்குறி என்ன சொல்லுமோ?

அருவியார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு
ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப்
பீலிமஞ்ஞைப் பெடையோடாடுங்
குன்றநாடன் பிரிவிற் சென்று
நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை
செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
கட்டிற் கெட்கும் ஆயின் வெற்பில்
ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்
குறுகிளி கடிகம் சென்றும் இந்
நெடிவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே

நற்றிணை பாடல். 288
இயற்றியவர்: குளம்பனார்
திணை: குறிஞ்சி
துறை: தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குரைப்பவளாய் வெறியறிவுறீஇ வரைவுகடாயது


கவிதாரசம்


வெறியாட்டம்!

ͨÉô âìÌüÚõ ¦¾¡¼¨Ä ¨¾þÔõ
Á¨Äî ¦ºí¸¡ó¾ள் ¸ñ½¢ ¾óÐõ
¾ý ÅÆ¢ôÀίõ ¿õ ¿Âó¾ÕÇ¢
¦ÅÈ¢¦ÂÉ ¯½÷ó¾ «Ã¢Â «ý¨É¨Â
¸ñ½¢Öõ ¸ÉÅ¢Öõ ¸¡ðÊ, þ󧿡ö
±ýÉ¢Ûõ šáРÁ½¢Â¢ý §¾¡ýÚõ
«õÁ¨Ä츢Ƨšý ¦ºö¾Éý þÐ ±É¢ý
ÀÎ Åñ¼¡÷ìÌõ ¨Àó¾¡÷ Á¡÷À¢ý
¦¿Î§ÅðÌ ²¾õ ¯¨¼ò§¾¡
¦¾¡Ê§Â¡ö ÜÚÁ¾¢ Å¢É×தø ¡§É.
நூல்: நற்றிணை
¾¢¨½: ÌȢﺢ
À¡¼ø ±ñ: 173
À¡ÊÂÅ÷:.........(பெயரிடவில்லை)


கவிதாரசம்


அதோ பார் ஊர் வந்து விட்டது...

பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புறத்து எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே;
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும் எம்சிறு நல் ஊரே.

நூல்: நற்றிணை
பாடல் எண்: 264
பாடியவர்: ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்


கவிதாரசம்


அப்பாடி.. பாராட்டு வாங்கிய மேகம்!!

விருந்து எவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு உமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் வரவு அறிந்து விரும்பி
மாக்கடல் முகந்து மணிநிறத்து அருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்து படப்பாஅய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல்லேற்றொடு செறிந்த இம்மழைக்கே?
நற்றிணை
பாடல் எண்: 112
பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார்


கவிதாரசம்


மேகத்தின் தவறு! (மீண்டும்)

வறம் கொல வீந்த கானத்துக் குறும்பூங்
கோதை மகளிர் குழுஊ கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
அவர் நிலை அறியுமோ ஈங்கென வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்றுடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்
இனிய அல்ல நின் இடி நவில் குரலே.

நற்றிணை பாடல் எண்: 238
பாடியவர்: (ஓரோடகத்து?) கந்தத்தனார்


கவிதாரசம்


மேகத்தின் தவறு, மலர்களின் அறிவீனம்!

நீரற வறந்த நிரம்பா நீளிடை
துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தான்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை! மதியின்று
மறந்து கடல் முகந்த கமல் சூழ் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவும் கொன்றையும் கோடலும்
மலர்ந்தன ஆகலின் மலர்ந்தன பலவே.

பாடல் எண்: 99
பாடியவர்: இளந்திரையனார்
நூல்: நற்றிணை


கவிதாரசம்


அன்பில்லா மேகம் அறிவில்லா மயிற்கூட்டம்

சிறுவீ முல்லை தேம்கமழ் பசுவீ
பொறிவரி நன்மான் புகர்முகம் கடுப்ப
தண்புதல் அணிபெறமலர, வண்பெயல்
கார்வரு பரு பருவம் என்றனர் மன் - இனி
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர்குரல் வாய் செத்ததாலும்
இனமயில் மடக்கணம் போல
நினை மருள்வேனோ வாழியர் மழையே

பாடல் எண்: 248
பாடியவர்: காசிபன் கீரனார்
நூல்: நற்றிணை


கவிதாரசம்


நற்றிணை கவிநயம் (அறியாத மேகம்!)

மடவது அம்ம மணி நிற எழிலி
மலரின் மெளவல் நலம் வரக்காட்டி
கயலேர் உண்கண் கனங்குழை இவை நின்
எயிறேர் பொழுதின் ஏய்தருவோமென
கண்ணகன் விசும்பின் மதியென உணர்ந்த
நன்னுதல் நீவிச் சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாராவளவை யத்தக்
கல்மிசையடுக்கம் புதையக் கால்வீழ்த்து
தனிதரு தண்கார் தலைஇ
விளி இசைத் தன்றால் வியலிடத்தானே.

பாடல் எண்: 316
பாடியவர்: இடைக்காடனார்
நூல்: நற்றிணை


கவிதாரசம்


புறநானூறு கவிநயம்

167. ஒவ்வொருவரும் இனியர்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி.
திணை: வாகை. துறை: அரச வாகை.

நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,
ஊறுஅறியா மெய் யாக்கை யடு.
கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!
அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்குமிவ் வுலகம்; அஃது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.

95. புதியதும் உடைந்ததும்!

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். துறை: வாண் மங்கலம்,

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.


கவிதாரசம்


நற்றிணை கவிநயம்

வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ,.
வாப் பறை விரும்பினையாயினும் தூச்சிறை
இரும்புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கருங்கால் வெண்குருகு எனவ கேண்மதி:
பெரும்புலம்பின்றே, சிறுபுன் மாலை;
அது நீ அறியின் அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி - தழையோர்
கொய்குழல் அரும்பிய குமரி ஞாழல்
தெண்திரை மணிப்புறந்தை வரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோர்க்கே.

பாடல் எண்: 54
பாடியவர்: சேந்தங்கண்ணணார்
நூல்: நற்றிணை


கவிதாரசம்


நற்றிணை கவிநயம்

சிறுவெள்ளாங்குறுகே! சிறுவெள்ளாங்குறுகே!
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறங்கிளர் தூவி சிறுவெள்ளாங்குறுகே!
எம்மூர் வந்தெம் ஒண்துறை துழைஇச்
சினைகெளிற்றார்கயை அவரூர் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங்
கழனி நல்லூர் மகிழ்நநர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பாதோயே

பாடல் எண் 70
பாடியவர்: வெள்ளி வீதியார்
நூல்: நற்றிணை


கவிதாரசம்


கம்பனின் கவிநயம் 02

சேல் உண்ட ஒண் கணாணதல் திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக், கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை.

கவிதாரசம்


கம்பனின் கவிநயம் 01

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.

கவிதாரசம்


கவிநயம் - அகநானூறு

ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்

கவிதாரசம்


கவிநயம் - புறநானூறு

உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

கவிதாரசம்


கவிநயம் - நற்றிணை

நற்றிணை – பாடல் எண்: 242
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்பப்
புதர் இவர் தளவம் பூங்கொடி அவிழப்
பொன் எனக் கொன்றை மலர மணியெனப்
பல்மலர் காயாங்குறுஞ்சினை கஞலக்
கார்தொடங்கின்றே காலை வல்விரைந்து
செல்க பாகரின் தேரே உவக்காண்
கழிப்பெயர் களரில் போகியமடமான்
விழிக்கண் பேதையொடு இனனிரிந்தோடக்
காமர் நெஞ்சமொடு அகலாத்
தேடூஉ நின்ற இரலை ஏறே

திணை: முல்லை
கூற்று: வினை முற்றி மறுத்தரா நின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது
பாடியவர் : விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்

கவிதாரசம்

Free Website Templates
© 2005 Tamil Heritage Foundation, All Rights Reserved.